கட் அவுட்டும் வைப்பேன்.. தலையில் குட்டவும் செய்வேன்.. விருது இயக்குநரை எச்சரித்த தயாரிப்பாளர்!

By Staff

சென்னை: விருது வாங்குறதுக்கு படம் பண்றேன்னு ஏற்கனவே ஒரு தயாரிப்பாளரை கடனாளியாக மாற்றி விட்டார் அந்த இயக்குநர்.

ஒரு கதையை ஆரம்பித்து அதை வழவழன்னு இழுத்து விட்ட இயக்குநர் தயாரிப்பாளரை சமாளிக்க சீக்வெல் கதையை சொல்லி மடக்கியதில் இருந்தே இயக்குநர் மீது அந்த தயாரிப்பாளருக்கு பெருங்கோபம்.

இந்நிலையில், இந்த இயக்குநருக்காக படம் பண்ண பல ஆண்டுகளாக காத்திருக்கும் தயாரிப்பாளர் இயக்குநரை கடுமையாக மிரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வொர்க் முக்கியம்

வொர்க் முக்கியம்

எடுத்துக் கொண்ட வேலையை சீக்கிரம் செய்யும் பழக்கமே அந்த இயக்குநருக்கு கிடையாது. மற்ற இயக்குநர்களை போல அவசர அடி ரங்கா வேலைகளை எல்லாம் பார்க்காத அவர், வொர்க் முக்கியம் என எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை டேக்குகள் போனாலும் படத்தை இயக்கி வருவார் என்பது ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரிக்கே தற்போது உருவாகி வரும் படம் மூலம் தெரிந்து விட்டது.

கடனில் தயாரிப்பாளர்

கடனில் தயாரிப்பாளர்

இந்த இயக்குநரை நம்பி சின்ன ஹீரோ சின்ன படம் என இறங்கிய தயாரிப்பாளர் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவதாக பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஏகப்பட்ட காட்சிகளை எடுத்து விட்டதால், தயாரிப்பாளருக்கு இரண்டு படமாக பண்ணித் தருகிறேன் என சமாதானம் பேசியிருக்கிறாராம் அந்த இயக்குநர்.

காத்திருந்து காத்திருந்து

காத்திருந்து காத்திருந்து

பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற அந்த இயக்குநர் ஆசைக்காக பிரைட் நடிகரின் கால்ஷீட்டையே வாங்கிக் கொடுத்த தயாரிப்பாளர் இந்த இயக்குநர் படத்தை இன்னைக்கு ஆரம்பிப்பார், நாளைக்கு ஆரம்பிப்பார் என காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என பாடி வருகிறார்.

பாராட்டுவது போல குட்டு

பாராட்டுவது போல குட்டு

இந்நிலையில், சமீபத்தில் இயக்குநரை பெரியளவில் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் பாராட்டியது மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் தனது படத்தை பற்றிய எண்ணம் அந்த இயக்குநருக்கு வரவேண்டும் என்கிற வேலைகளை தீவிரமாக பார்த்துள்ளார். சீக்கிரம் முடிச்சிட்டு வாங்க நம்ம படத்தை பண்ணுவோம் என்கிற ரீதியில் மறைமுக எச்சரிக்கையை கொடுத்துள்ளார் அந்த தயாரிப்பாளர் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கண்டுக்காத இயக்குநர்

கண்டுக்காத இயக்குநர்

தயாரிப்பாளர் என்னதான் மறைமுகமாக தன்னை மிரட்டினாலும், அந்த இயக்குநர் அதை பற்றியெல்லாம் கண்டு கொள்ளவில்லையாம். இப்போதைக்கு இந்த படத்தை முடித்து விட்டுத் தான் அதைப் பற்றியே யோசிப்பேன் என்கிற ரீதியில் செயல்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X