பாவாடை கட்டிக்கிட்டு குளிக்கிற சீன்.. நடிகைகளை பாடாய்ப்படுத்திய இயக்குநர்.. காரணம் அந்த பிரபலமா?
சென்னை: பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனது படங்களில் எப்படியாவது நடிகைகள் குளிக்கும் காட்சியை படமாக்கியே தீர வேண்டும் என இயக்குநர்களை டார்ச்சர் செய்ததாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. அந்த காலத்தில் பெரும்பாலான படங்கள் கிராமப்புற கதைகளை மையப்படுத்தியே வெளியாகின.
சினிமாவில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடவே சில நடிகைகளை படங்களில் கமிட் பண்ணி வந்தார்கள். கிராமப்புற படங்களில் டிஸ்கோ பாடல்களுக்கும் பெரிதாக வழி இல்லாத நிலையில், சிலர் கனவுப் பாடல்களை உருவாக்கினர்.

ஒரு சில தயாரிப்பாளர்கள் குளியல் காட்சிகளையும் குறிப்பாக நடிகைகள் பாவாடை மட்டுமே அணிந்துக் கொண்டு நடிக்க வேண்டும் என வற்புறுத்தி படங்களை எடுத்ததாக பழைய பிரபலம் ஒருவர் சமீபத்தில், நட்பு வட்டாரத்தில் பேசி சிரித்தது கோடம்பாக்கத்தில் அப்படியே காத்து வாக்குல பரவத் தொடங்கி விட்டது.
மதிப்புமிக்க நபர் போல: பெரிய தயாரிப்பாளரான அந்த நபர் பார்ப்பதற்கு அப்படியே கையெடுத்துக் கும்பிடக் கூடிய அளவுக்கு மதிப்புமிக்க நபராகவே சினிமா துறையில் வலம் வந்தார். ஆனால், அவருக்கு வீக்னஸ் ஆகவே அவரது படங்களில் ஹீரோயின்கள் வேறு வழியின்றி வெறும் பாவாடையை கட்டிக் கொண்டு நடிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது அந்த காலத்திலேயே கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இயக்குநர் காரணம் இல்லை: அந்த தயாரிப்பாளர் தயாரிக்கும் படங்களில் பணியாற்றும் இயக்குநர்கள் பெரிய இயக்குநர்கள் என்பதால், அவர்களை எதிர்த்தோ கேள்விக் கேட்டோ நடிக்க முன்னணி நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் துணிச்சல் இல்லையாம். அதனால், இயக்குநர்கள் கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்கின்றனர் என நடிகைகளும் ஆடைகளை துறந்து வெறும் டவல் கொடுத்தாலும் கட்டிக் கொண்டும், பாவாடை கொடுத்தாலும் கட்டிக் கொண்டு ஆற்றிலும், பாத்ரூமிலும் குளிக்கும் காட்சிகளில் ஓரவஞ்சனை காட்டாமல் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நடித்து கொடுத்துள்ளனர். ஆனால், அதற்கு எல்லாம் காரணம் இயக்குநரே கிடையாதாம். அந்த பிரபலமான தயாரிப்பாளர் தான் என பழைய பிரபலமும் தயாரிப்பாளருக்கு நெருக்கமான நண்பரும் சமீபத்தில் கட்டுச் சோத்தை கூட்டத்தில் அவிழ்த்திருக்கிறார்.
முதல் ஆளாக வந்துவிடுவாராம்: மற்ற நாட்களில் எல்லாம் இயக்குநரையும் அவரது படைப்பையும் எந்த விதத்திலும் ஏறெடுத்துக் கூட பார்க்காத தயாரிப்பாளர், இயக்குநர் இந்த கில்மா காட்சியை எடுக்கிறார் என்றதும் முதல் ஆளாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார் என்றும் கூறியிருக்கிறார். மேலும், அந்த மாதிரி காட்சிகளை வைத்து தான் பல படங்களை படு ஜோராக வியாபாரம் பார்த்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர் என்கின்றனர். வெளிநாட்டு படங்களை போல நிர்வாணக் காட்சிகளையும் எடுக்க சில முயற்சிகளையும் அந்த தயாரிப்பாளர் செய்தார் என்றும் அதெல்லாம் இங்கே பெரிதாக கைகொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











