உனக்கு எல்லாம் இனி அவ்ளோ சீன் இல்லை.. பெரிய சம்பளம் கேட்ட நடிகருக்கு செம நோஸ்கட்!

By Staff

சென்னை: தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் அந்த பிரபல நடிகர் தனக்கு பிறகு சினிமாவில் வந்த நடிகரெல்லாம் அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்கிற பொறாமையில், தயாரிப்பாளரிடம் தனது சம்பளத்தை அதிகமாக ஏற்றிக் கேட்ட நிலையில், அந்த தயாரிப்பாளர் பப்ளிக்காகவே நோஸ் கட் செய்து விட்டார் என பரபரப்பு கிளம்பி உள்ளது.

சினிமாவில் சமீப காலமாக நடிகர்கள் தங்களின் ஸ்டார் வேல்யூவை எல்லாம் காட்ட முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பிட்டு ஒரு டாப் 5 நடிகர்கள் மட்டுமே ஃப்ளாப் படங்களை கொடுத்தாலும், பெரிய ஃபேன் பேஸை வைத்து இருப்பதால் தயாரிப்பாளர்கள் அவர்கள் தகுதிக்கும் மீறிய சம்பளத்தை வேறு வழியில்லாமல் கொடுத்து வருகின்றனர்.

Popular Producer roast Top Hero for hiking his salary

ஆனால், டாப் 10ல் இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் சீனியாரிட்டியை காட்டி தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என பழைய ஹிஸ்டரியை எல்லாம் எடுத்து பேச கரன்ட் கண்டிஷனை செட்டில் இருந்த சிலருக்கு முன்னாடியே ஓபனாக தயாரிப்பாளர் போட்டு உடைத்தது நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம்.

ஓவர் பணத்தாசை: சினிமாவே அழிந்தாலும் பரவாயில்லை, எனக்கு கொடுக்கிற சம்பளத்தை மட்டும் எந்தவொரு குறையும் வைக்காமல் கொடுத்து விடுங்க, படம் வெளியான பின்னர், ஓடவில்லை என்றால், என்னை எதுவும் கேட்காதீங்க, டைரக்டரை கேளுங்க என கடந்த சில படங்களாகவே மொக்கை படங்களில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு நாமத்தை போட்டு வந்த அந்த பிரபல நடிகரின் மார்க்கெட் தற்போது ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டது எனக் கூறுகின்றனர்.

சரிந்த மார்க்கெட்: சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தால் மட்டுமே நாம் சொல்வதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கேட்பார்கள். அப்படி இல்லையென்றால், அவங்க சொல்றதை தான் ஹீரோக்கள் கேட்க வேண்டும். அந்த நிலைமை தான் தற்போது மார்க்கெட் காலியான அந்த நடிகருக்கும் ஏற்பட்டுள்ளதாம். ஆனாலும், தனது பழைய ரெக்கார்ட்ஸை எடுத்துக் காட்டி அதே கெத்தை பல இடங்களிலும் மெயின்டெயின் செய்து வரும் ஹீரோவை ஒரு தயாரிப்பாளர் அசிங்கப்படுத்தியது கோடம்பாக்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செம நோஸ் கட்: கடந்த 2 படங்களும் ஹீரோவின் சம்பளம் அளவில் பாதியை கூட தியேட்டரில் வசூல் செய்யாத நிலையில், ஏதோ ஓடிடி வியாபாரத்தை நம்பி பிசினஸ் கொஞ்சம் ஆனது. அதிலேயே அந்த தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் தான். இப்போ உங்களுக்கு எல்லாம் அவ்ளோ சீன் கிடையாது. சம்பளத்தை 30 சதவீதம் குறைத்து நம்ம படத்துல நடிங்க, அதுவே உங்களுக்கு ஜாஸ்தி தான் என ஹீரோவை செம நோஸ்கட் செய்து விட்டாராம் தயாரிப்பாளர். கோபத்தில் செட்டை விட்டுக் கிளம்பிய ஹீரோ, 2 நாட்களாக ஷூட்டிங் திரும்பாத நிலையில், படம் டிராப் ஆகிவிடுமா? என்கிற அச்சம் எழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X