அந்த நடிகைக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி.. வேற ஆளை பாருங்க.. டைரக்டரிடம் தயாரிப்பாளர் கறார்!
சென்னை: சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நடிகைக்கு ஒரு பெரிய படத்தில் கிடைக்கவிருந்த வாய்ப்பை தயாரிப்பாளர் வேண்டாம் என அதிரடியாக நிறுத்தி விட்டார் என பரபரப்பான கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பொதுவாகவே சினிமா துறையில் ஏகப்பட்ட விஷயங்களை தயாரிப்பாளர்கள் ரொம்பவே கண்ணும் கருத்துமாக பார்ப்பார்கள். நல்ல கதையை தவிர என்கிற பழமொழி உள்ளது. திறமையான நடிகர்களை விட பிரபலங்களின் வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டுமென்றால் எவ்வளவு துட்டு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாரிப்பாளர்கள் ரெடியாகவே இருப்பார்கள் என்கின்றனர்.

நடிகைகளை ஒரு படத்தில் புக் செய்வதில் ஹீரோக்களை விட அதிக ஆர்வத்தை தயாரிப்பாளர்கள் தான் காட்டி வருகின்றனர் என்றும் தயாரிப்பாளர் டிக் அடிக்கும் நடிகைக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து படத்தில் அவரை காண்பிக்க பல இயக்குநர் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கதைகளும் அதிகம் அரங்கேறியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.
வாய் ஜாஸ்தி: சமீபத்தில், பிரபல நடிகை ஒருவர் ஓவராக பேசிய நிலையில், அவர் நடித்த படத்துக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்தே ஆதரவு கிடைக்கவில்லை என்றும் நடிகை மட்டுமே தனக்கான மைலேஜை ஏற்றிக்கொள்ள அப்படி செய்துவிட்டார் என்றும் இதனால், படத்திற்கு ஒரு ரூபாய் கூட லாபம் ஏற்படவில்லை என பணம் போட்ட தயாரிப்பாளர் அந்த நடிகை மீது பயங்கர கோபத்தில் உள்ளதாகவும் சக நண்பர்களிடம் நடிகை பண்ண வேலையையும் அதனால், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் புலம்பி தள்ளிவிட்டார் என்கின்றனர்.
தடுத்த தயாரிப்பாளர்: இந்நிலையில், அந்த நடிகையை தனது புதிய படத்தில் கமிட் செய்யலாம் என நடிகைக்கு ஏற்றவாறு கதையெல்லாம் ஓகே பண்ண இயக்குநர் ஒருவரை அந்த படத்தின் தயாரிப்பாளர் தடுத்து நிறுத்தி, அந்த பொண்ணு வேண்டாம் என்றும் வேறு ஏதாவது நடிகையை பார்த்துக்கோங்க என்றும் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம்.
குழப்பத்தில் இயக்குநர்: எப்படியாவது கூடிய சீக்கிரத்தில் ஷூட்டிங் போய் படத்தை விரைவில் முடிக்கலாம் என அனைத்து வேலைகளையும் பார்த்த இயக்குநருக்கு தற்போது பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது என்கின்றனர். நடிகையை போலவே இன்னொரு நடிகையை உடனடியாக தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். மேலும், துணிச்சலாக ஒரு பெண் பேசி விட்டால், இங்கே பலருக்கும் பிடிக்காதே என்றும் இயக்குநர் தனது உதவி இயக்குநர்களிடம் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications