ஆளவிடுடா சாமி.. காப்பி இயக்குநரை கழட்டி விட்ட தயாரிப்பு நிறுவனம்.. உடைச்ச ஃபர்னிச்சரே போதுமாம்!
சென்னை: ஹிட் படங்களை அப்படியே காப்பி அடித்து கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றி புதிய படம் என பாலிஷ் போட்டு கொடுத்து ஊரை ஏமாற்றி வருகிறார் அந்த இயக்குநர் என தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், அந்த இயக்குநருக்கு பல முன்னணி நடிகர்கள் பட வாய்ப்புகளாக தூக்கிக் கொடுத்து வருகின்றனர்.
அந்த இயக்குநர் எடுத்த படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களை பெரிதளவில் காலி செய்து விட்டதாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உலா வருகின்றன.
இந்நிலையில், கடைசியாக அந்த இயக்குநரிடம் தலையை கொடுத்து தலைமறைவான அந்த தயாரிப்பு நிறுவனம் அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், ஆளவிடுடா சாமி என எஸ்கேப் ஆகி விட்டதாம்.

எல்லாமே காப்பி
திரைக்கதை மட்டுமின்றி எடுக்கும் ஒவ்வொரு காட்சியும் பல திரைப்படங்களின் சூப்பர் ஹிட் காட்சிகளில் இருந்து அப்படியே அப்பட்டமாக சுட்டு இதுவரை பிழைப்பை ஓட்டி வருகிறார் என்றும் அவருடைய மேக்கிங் தான் அவருக்கு ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது என்றும் மாஸ் நடிகரின் தலையில் நல்லா மசாலா தடவி இவரும் பெரிய இயக்குநர் என பெயர் வாங்கி விட்டார் என்றும் சினிமா வட்டாரத்திலேயே பலரும் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.

பந்தா காட்டியே
பெரிய பட்ஜெட் படம் எடுக்கிறோம் அந்த பிரம்மாண்டத்தின் சிஷ்யன் என பந்தா காட்டியே பல முன்னணி நடிகர்களை வளைத்துப் போட்டிருக்கிறார் அந்த இயக்குநர். இதுவரை தனது தனிப்பட்ட திறமையால் எந்தவொரு வெற்றியும் கொடுக்காத நிலையில், பாலிவுட் படமும் ஏகப்பட்ட கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு வாய்ப்பு
இதற்கு முன்னர் மாஸ் நடிகர் பல முறை அந்த இயக்குநரை ரொம்பவும் நம்பி வாய்ப்புக் கொடுத்தார். அதே போல, இன்னொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றலாம் என இயக்குநரின் பாலிவுட் பில்டப்பை நம்பி ஓகே சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அந்த இயக்குநர் வேண்டவே வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் தப்பித்து ஓடியதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவி வருகின்றன.

தப்பித்த தயாரிப்பு நிறுவனம்
ஏற்கனவே அந்த தயாரிப்பு நிறுவனம் அந்த இயக்குநரை நம்பி தலையை கொடுத்து போண்டி ஆனது போதாது என்று மறுபடியும் ஒன்ஸ்மோர் போகலாமா என நடிகரை விட்டு பிசினஸ் பேசியிருக்கிறார் அந்த இயக்குநர். அந்த நடிகர் படம் என்றால் தாராளமாக பண்ணலாம் என நினைத்திருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இவர் தான் இயக்குநர் என்று தெரிந்ததுமே ஆளவிடுடா சாமி என தப்பித்து ஓடிவிட்டதாம்.

பல கோடிக்கு பில்
ஏற்கனவே அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு சொன்ன பட்ஜெட் ஒண்ணு கடைசியாக பில் போட்டு கண்ணீர் விட வைத்த பட்ஜெட் இன்னொன்று என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், இந்த முறை பல கோடிக்கு இயக்குநர் போட்டுத் தந்த பில்லை பார்த்துத் தான் நம்ம ரேஞ்சுக்கு இதெல்லாம் செட் ஆகாது. ஏற்கனவே நீங்க உடைச்ச ஃபர்னிச்சர் போதும் என தயாரிப்பு நிறுவனம் கையெடுத்துக் கும்பிட்டு எஸ்கேப் ஆகி உள்ளதாம்.

வான்டட்டா வந்து
அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்த நடிகரை வைத்து எப்படி பிசினஸ் செய்வது எனத் தெரியவில்லை. நீங்க எங்ககிட்ட வாங்க நாங்க பார்த்துக்குறோம் என வான்டட்டா இன்னொரு பெரிய நிறுவனம் அழைத்து பேசி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய சீக்கிரமே அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய பில் போட்டுக் கொடுத்து பட வேலையை அந்த காப்பி இயக்குநர் கச்சிதமாக ஆரம்பித்து விடுவார் என தெரிகிறது. அந்த படம் ரிலீஸ் ஆவதற்குள் அடுத்த பட பிசினஸை ஆரம்பித்து விட வேண்டும் என்கிற அவசரம் தான் இதுக்கெல்லாம் காரணமாம்!


Click it and Unblock the Notifications











