இதுக்கு மேல செட்டாகாது.. கணவரை பிரியும் சீரியல் நடிகை.. அந்த மேட்டர் தான் காரணமா?
சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்து பிரியப் போவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. சினிமாவை தாண்டி ஓடிடி, மினி சீரிஸ் என ஏகப்பட்ட விஷயங்கள் வந்தாலும் இன்னமும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என ஏகப்பட்ட பெண்கள் மற்றும் ரசிகர்கள் சீரியல்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
சினிமா பிரபலங்களுக்கு இடையே மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகள் வாழ்விலும் ஏகப்பட்ட கசப்பான அனுபவங்களும் குடும்ப வாழ்க்கை கஷ்டங்களும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. பல சீரியல் நடிகைகள் முதல் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ முடியாமல் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கின்றனர்.

சிலர் 2வது திருமணத்தை செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். காதலித்து திருமணம் செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் வராது என்று சொன்ன காலம் எல்லாம் மலையேறிவிட்டது. சமீப காலமாக விவாகரத்துகள் அதிகம் நடப்பதே காதல் திருமணங்களில் தான் என்கின்றனர். அந்த சீரியல் நடிகையும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களுடன் நெருங்கி நடிக்க வேண்டிய கட்டாயம்: முன்பை போல சின்னத்திரை தொடர்கள் எல்லாம் இப்போது தூர நின்று வசனம் பேசுவதை எல்லாம் கடந்து படுக்கையறை காட்சிகள், முதலிரவு சீன், நடிகைகளை தூக்கிக் கொண்டு சுத்துவது, முத்தக் காட்சிகள் என சினிமாவுக்கும் ஓடிடி தொடர்களுக்கு இணையாக வர வேண்டும் என்கிற நோக்கில் எல்லை மீறி வருகின்றனர். அந்த கண்ணழகி நடிகை நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அவரது கணவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
அடிக்கடி வெளிநாட்டுக்கு ஏன் போற?: சின்னத்திரை தொடர்களை தாண்டி அடிக்கடி வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் அந்த நடிகை அதிகம் சம்பாதித்து வருகிறாராம். ஆனால், அதில் ஒரு பிரபலத்துடன் தொடர்ந்து அவர் பல முறை வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிக்காக சென்று வருவது கணவருக்கு பிடிக்காத நிலையில், அசிங்கமாக பேசிவிட்டது தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்கின்றனர்.
டைவர்ஸ் கேட்ட நடிகை: இதுக்கு மேல உன் கூட வாழ முடியாது. நான் நடிகைன்னு சொல்லித்தானே லவ் பண்ணேன். அப்போதெல்லாம் எதுவும் சொல்லாமல் என்னை லவ் பண்ணிட்டு, திருமணத்துக்குப் பிறகு ஏன் இப்படி தொடர்ந்து டார்ச்சர் பண்ற என்று கேட்டதும் இருவருக்கும் இடையே சண்டை வெடித்து விட்டதாம். இந்நிலையில், கணவரிடம் டைவர்ஸ் கேட்டு பிரிய முடிவெடுத்துவிட்டார் அந்த சீரியல் நடிகை என்றும் சீக்கிரமே இது வெளிச்சத்துக்கு வரும் என பகீர் கிளப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications