பாட்டு நடிகையை பாடாய்ப்படுத்தும் வாரிசு நடிகர்.. சிக்க வைக்கத் துடிக்கும் விஷமிகள்?

By Staff

சென்னை: பாட்டு நடிகை தனது திறமையான நடிப்பால் பல்வேறு மொழிகளில் நடித்து டாப் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், பிரபல நடிகரின் வாரிசுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. அந்த படத்தின் புரமோஷனுக்காக பாட்டு நடிகையை வாரிசு நடிகர் பாடாய்ப்படுத்தி வருகிறார் என்கிற கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

கிளாமர் காட்டித்தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற பாடத்தை பல நடிகைகள் படித்து விட்டு ஃபாலோ செய்து வரும் நிலையில், திறமையான நடிப்பு இருந்தாலே போதும், கவர்ச்சி மற்றும் ஆபாசம் தேவையே கிடையாது என பாட்டு நடிகை நெற்றி பொட்டில் அடிப்பது போல அடித்து அசத்தி வருகிறார்.

Popular South Actress facing big troubles with Nepo Kids
Photo Credit:

இதன் காரணமாகவே நடிகை மீது சில ஓவர் கிளாமர் ஒப்பனை நடிகைகலுக்கு பொறாமைத் தீ பற்றி எரிகிறது என்கின்றனர்.

கலக்கும் சவுத் நடிகைகள்: வடக்கில் தென்னிந்திய நடிகைகளின் ஆதிக்கம் தான் இப்போது செம டாப்பில் உள்ளது என்றும் ஹீரோக்கள் பான் இந்தியா அளவில் தங்கள் படங்களை கொண்டு சேர்க்க சவுத் நடிகைகளையே பெரிதும் விரும்புவதாக கூறுகின்றனர். மேலும், கவர்ச்சியை தவிர நடிப்புன்னா என்னன்னே தெரியாத நடிகைகள் தான் வடக்கில் இப்போதைக்கு அதிகம் இருப்பதாலே நடிகைகளின் தேவைக்காகவே சவுத் நடிகைகளை அதிகம் தேடுவதாகவும் அவர்களுக்கு வாய்ப்புகள் குவிவதாகவும் கூறுகின்றனர்.

வாடிப்போன வாரிசு நடிகைகள்: பெரிதாக நடிக்கத் தெரியவில்லை என்றாலும் அம்மா நடிகை, அப்பா நடிகர் என சினிமாவுக்கு ஈஸியாக் வந்த நெப்போ கிட்ஸ்கள் எல்லாம் பாட்டு நடிகையின் வரவால் பதறிப் போயுள்ளதாக கூறுகின்றனர். எப்படியாவது நடிகையை அசிங்கப்படுத்த வேண்டும் என்று சிலர் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் நடிகையின் ஆபாச ஏஐ வீடியோக்கள், அவர் செல்லும் இடங்களில் ஜூம் செய்து மோசமான விஷயத்தைக் காட்டுவது உள்ளிட்ட வேலைகளை நெப்போ கிட்ஸ் நடிகைகளின் ஏஜென்ட்டுகள் விஷமத்தனத்தோடு செய்து வருவதாக திடுக்கிட வைக்கின்றனர்.

பாடாய்ப்படுத்தும் வாரிசு நடிகர்: பாட்டு நடிகையை விட ஓவர் மேக்கப் போட்டுக் கொண்டு வருவதும், நடிகையின் தோள் மீது கை போட்டு உரசுவதுமாக வாரிசு நடிகரும் முடிந்த வரை நடிகையை கரெக்ட் செய்யப் பார்க்கிறார் என்றும் ஆனால், எதற்குமே நடிகை மசியாமல் கெத்துக் காட்டி வருகிறார் என்கின்றனர். நடிகையை வைத்து வாரிசு மட்டுமின்றி அவரது அப்பா போடும் பில்டப் டிராமா எல்லாம் கூட செம காமெடியாக உள்ளதாக ட்ரோல்கள் குவியத் தொடங்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X