twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதுக்காகத்தான் அந்த விவாகரத்து வதந்தியே கிளப்பி விட்டாங்களாம்.. இன்னுமா அந்த டெக்னிக்கை நம்புறாங்க?

    By Staff
    |

    சென்னை: புதிய படங்கள் ரிலீசாகும் போது நடிகர்கள் நடிகைகளின் அந்தரங்க மேட்டர்கள் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று தான்.

    நேரடியாக படத்தை புரமோட் செய்யாமல் அந்த நடிகரின் குடும்பத்தில் அப்படி ஆகிடுச்சு, அந்த நடிகைக்கு இப்படியொரு தொடர்பு இருக்கு என கிளப்பி விட்டு நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடிக் கொள்வார்கள்.

    அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!

    படக்குழுவே நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்யும் போது நடிகர்களும் அது குறித்து கண்டும் காணாத மாதிரி இருந்து விடுவார்கள்.

    விவாகரத்து வதந்தி

    விவாகரத்து வதந்தி

    சமீபத்தில் சமத்து நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையேயான விவகாரத்து வதந்திக்கும் இதே நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் காரணம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக வதந்திகளை கட்டவிழ்த்து விட்டு நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடிக் கொண்டார்கள் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன.

    அதனால் தான் மறுக்கவில்லை

    அதனால் தான் மறுக்கவில்லை

    எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் துணிச்சலுடன் செம போல்டாக ஸ்டேட்மென்ட் வெளியிடும் அந்த நடிகை இப்படியொரு விவகாரம் தன்னை பற்றி வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதை பற்றி தெரியவே தெரியாத மாதிரி இருக்க காரணமும் அது தான் என கூறுகின்றனர்.

    நம்பியார் டெக்னிக்

    நம்பியார் டெக்னிக்

    ஆக்‌ஷன் படங்களுக்கு இந்த வில்லன் நம்பியார் கால டெக்னிக் உதவாது என்றாலும், இந்த படம் காதல் படம் என்பதால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்று திட்டமிட்டே இப்படியொரு நெகட்டிவ் புரமோஷனை மேற்கொண்டுள்ளனர் என்கிற குற்றச்சாட்டுகளும் பக்கத்து மாநில மீடியாக்களில் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

    ஆகாத நடிகையுடன் தொடர்பு

    ஆகாத நடிகையுடன் தொடர்பு

    மேலும், அந்த நடிகருக்கும் அவரது மனைவிக்கும் ஆகாத கால் அழகி நடிகையுடன் தொடர்பு படுத்தி வதந்திகள் கிளம்பவும் அது தான் காரணம் என்றும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. படத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படியான புரமோஷன்களை கடைசி நேரத்தில் கையில் எடுப்பார்கள் என்பது போல இந்த படத்தையும் ஓட்டுவதற்காக இப்படியொரு சர்ச்சையை கொளுத்தி போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இருவரும் இணைந்து

    இருவரும் இணைந்து

    விரைவிலேயே இருவரும் இணைந்து படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் போஸ் கொடுத்து அவர்களாகவே க்ரியேட் பண்ண வதந்திக்கு அதிரடியாக முற்றுப்புள்ளியும் வைத்து விட திட்டமிட்டுள்ளதாகவும் சூடான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நல்ல கதையை நம்பி படமெடுத்தால் இப்படிப்பட்ட பித்தலாட்ட வேலைகள் எல்லாம் செய்யத் தேவையில்லையே என்று அந்த பக்கம் ஒரே பேச்சாக உள்ளது.

    English summary
    Popular Star couple Divorce rumour is only for negative publicity for actor’s recent release movie reach among audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X