கல்யாணம்லாம் பண்ண முடியாது.. பிரபல நடிகை நச்சரிப்பு.. கடுப்பான வி நடிகர்.. என்ன நடக்குது?
சென்னை: வி நடிகரும் பிரபல நடிகையும் வெகு காலமாக ரகசியமான உறவில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், சமீப காலமாக இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களே வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
பல ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் எப்போது தான் திருமணம் செய்துக் கொள்வார்கள் என விசாரித்ததில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளு எண்ணமே இல்லை என ஷாக்கை கிளப்பி உள்ளனர்.
நடிகைக்கு திருமணம் செய்துக் கொள்ள ஆசை இருந்தாலும், நடிகர் தான் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ரகசிய காதலும் லிவிங் டுகெதர் வாழ்க்கையும்:
வி நடிகருக்கும் வி எழுத்து நடிகைக்கும் நீண்ட காலமாக ரகசிய காதல் ஓடிக் கொண்டிருக்கிறது. சில நாட்களாக அதனை வெளிப்படையாக அனைவரும் அறியும் வகையில் இருவரும் வெளியே சுற்றும் புகைப்படங்களை பகிரங்கமாகவே இருவரும் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
திருமணத்தில் விருப்பம் இல்லை:
சாக்லேட் பாயாக நடித்து வந்த அந்த வி எழுத்து நடிகர் சமீப காலமாக வில்லனாக மாறி மிரட்டி வருகிறார். ஆனால், அவருக்கு திருமணத்தில் எல்லாம் பெரிதாக நம்பிக்கையே இல்லையாம்.
இரு மனங்கள் ஒன்று போய் விட்டால் அப்படியே வாழ்ந்து விட வேண்டும் என்றும் செட் ஆகவில்லை என்றால் பிரிந்து சென்று விடலாம் என்கிற தத்துவத்துடன் தான் நடிகைக்கு ப்ரபோஸ் செய்து இதுவரை அவருடன் ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்கின்றனர்.

நடிகைக்கு திருமணத்தில் ஆசை:
ஆனால், நடிகை மற்ற நடிகைகளை போல தன்னுடைய திருமணமும் கோலாகலமாக நடைபெற வேண்டும் என்று சமீப காலமாக நடிகரின் முடிவுக்கு எதிராக நச்சரித்து வருகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால், சில நாட்களாக நடிகையுடன் அந்த வி எழுத்து நடிகர் பேசக் கூட இல்லை என்கின்றனர். திருமணம் வேண்டாம் என்பதில் நடிகர் திட்டவட்டமாக இருப்பதாகவும், நடிகை தான் நடிகரின் கண்டிஷனுக்கு ஒத்து போக வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











