விவாகரத்து பஞ்சாயத்து ஆரம்பம்.. அந்த நடிகருக்கு மட்டும் தாராளம் காட்டுற.. கடுப்படித்த கணவன்!
மும்பை: கணவருடன் நடிக்கும் போது கூட ரொம்பவே கன்ட்ரோல் உடன் நடித்து வரும் அந்த நடிகை அந்த பிரபல நடிகர் படத்துக்கு மட்டும் சர்வ தாராளமாக நடித்ததை பார்த்த கணவர் நடிகரின் நண்பர்கள் பார்ட்டி ஒன்றில் மனைவி குறித்து கண்டபடி பேசி உள்ளார்களாம்.
குடி போதையில் செம கடுப்பான நடிகர் அதே கோபத்துடன் வீட்டில் வந்து நடிகையை திட்டிய நிலையில் தான் தற்போது விவாகரத்து பஞ்சாயத்து ஆரம்பித்து உள்ளது என்கிற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் அதை வெளிக்காட்டும் விதமாகவே நடிகை நடந்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.

டாப் ஹீரோயின்
பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வரும் அந்த நடிகை சமீப காலமாக கவர்ச்சி ரூட்டுக்கு தாறுமாறாக திரும்பி ஒட்டுமொத்த நடிகைகளையும் கவர்ச்சி பாதைக்கு மீண்டும் திருப்பி விட்டார் என கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பல கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தால் முன்னணி நடிகைகள் நிர்வாணமாக நடிக்கவே தயாராக உள்ள நிலையில், நடிகை செய்தது எல்லாம் சாதாரணம் என நடிகையின் தரப்பு எதிர்வாதம் செய்து வருகிறது.

கணவருடன் முட்டிக்கிச்சு
இதே பிரச்சனை நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே தற்போது பயங்கரமாக வெடித்துள்ளதாக கூறுகின்றனர். சமீபத்தில், இதனை நடிகை அப்பட்டமாக வெளிப்படுத்தியது தான் பெரும் பரபரப்பு கிளம்ப காரணமே என்கின்றனர். முன்பை போல கணவருடன் சமீப காலமாக நடிகை பேசுவது கூட இல்லையாம்.

சண்டைப் போட்ட கணவன்
பார்ட்டி ஒன்றில் நடிகரின் நண்பர்கள் குடித்து விட்டு கும்மாளம் போடும் போது நடிகரை வெறுப்பேற்றும் விதமாக அவரது மனைவி குறித்து இஷ்டத்துக்கு பேசியது நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. அதே குடி போதையுடன் நடிகையிடம் வந்து சண்டை போட்டு இருக்கிறாராம் அந்த நடிகர்.

தகாத வார்த்தைகள்
அந்த நடிகருக்கு மட்டும் ஏன் தாராளம் காட்டி நடிக்கிற, எனக்கு சினிமாவே ஓட மாட்டேங்குது என் படங்களில் எல்லாத்தையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கிற, உங்க ரெண்டு பேருக்கும் இடையே என்ன நடக்குது என ரொம்ப மோசமாக நடிகர் பேசியதும் குடித்து விட்டு பேசுற இத்துடன் அனைத்தையும் நிறுத்திக்கோ என நடிகை கடுப்படித்து இருக்கிறாராம்.

விவாகரத்து பஞ்சாயத்து
தொடர் தோல்வி காரணமாக நடிகர் இப்படி மோசமாக நடந்து கொண்டது நடிகையை உறுத்திக் கொண்டே இருப்பதாக கூறுகின்றனர். தனது தவறுக்கு அடுத்த நாள் நடிகர் மன்னிப்பு கேட்ட நிலையிலும், நடிகைக்கு கோபம் கொஞ்சம்கூட குறையவில்லை என்கின்றனர். சீக்கிரமே தனது கணவரை பிரிய முடிவு செய்துள்ளதாகவும் விவாகரத்து பஞ்சாயத்து எழுந்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெடித்துள்ளன.


Click it and Unblock the Notifications











