கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு.. விசேஷம் இல்லையா? மாமியாரின் அழுத்தத்தால் அப்செட்டான வாரிசு நடிகை!

சென்னை: தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அந்த 'கண் அழகி' நடிகையின் மூத்த வாரிசு அவர். வாரிசு நடிகையாக சினிமா உலகிற்குள் நுழைந்தாலும், ஆரம்பத்திலேயே தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தார். குறிப்பாக, தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே 'துடிப்பான பத்திரிகையாளர்' வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார். அதைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் உள்ள மாஸ் ஹீரோக்களின் படங்களிலும், தமிழில் புரட்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த வாரிசு நடிகைக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சரியான படவாய்ப்புகள் அமையாததால், சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார்.

Gossiop Tamil cinema Gossip

மூத்த நடிகையின் மகள்: திரையுலகில் இருந்து சற்று விலகியிருந்த அந்த உயரமான நடிகைக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட தொழிலதிபருடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. கேரளக் கடற்கரை ஓரம் நடந்த அந்தத் திருமணத்திற்குப் பிறகு, ஒரு சில படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், இதுக்கு மேல நடிப்பு என்று நான் உண்டு தன் குடும்பம் உண்டு என கேமரா பக்கமே வராமல் ஒதுங்கி தந்தையின் பிரம்மாண்டமான ஹோட்டல் பிசினஸை முன்னின்று கவனித்து வருகிறார்.

வாரிசு நடிகை வீட்டில் வாரிசு பிரச்சனை: வாரிசு நடிகையின் மகளுக்கு திருமணாமாகி சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் வீட்டில் 'மழலைச் சத்தம்' கேட்கவில்லையாம். இதனால் மாப்பிள்ளை வீட்டில் வாரிசை எதிர்பார்த்து, நடிகைக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால், பிசினஸில் மிகப்பெரிய உயரத்தைத் தொட வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் நடிகையோ, இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை என மாமியார் வீட்டாரிடம் கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம். தன் கரியரில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த நினைக்கும் நடிகையின் இந்த பிடிவாதமான முடிவால், மாமியார் வீட்டிற்கும் அவருக்கும் இடையே சின்னதாகப் புகைச்சல் ஓடிக்கொண்டிருப்பதாகத் திரையுலகில் தகவல் கசிந்துள்ளது. 'வாரிசு' விஷயத்தில் ஏற்பட்டுள்ள இந்த மனக்கசப்பு, குடும்பத்திற்குள் பெரிய பஞ்சாயத்தாக வெடித்துள்ளதாகத் திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X