செகண்ட் சேனல் பேச்சைக் கேட்ட நடிகருக்கு பக்காவாக செட்டான‌ புது பிசினஸ்.. பணத்தை அள்ளுறாங்களாம்

By Staff

சென்னை: வாழ்க்கையினா அப்பப்ப ரிஸ்க் எடுக்கனும், ரிஸ்க் இல்லாத வாழ்க்கை என்னங்க வாழ்க்கை என்று பலரும் கூற கேட்டிருப்போம், அதற்காக தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு யாராவது ரிஸ்க் எடுப்பார்களா? அப்படித்தான் இந்த நடிகர் பெரிய லெவலில் ரிஸ்க் எடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர். இவரது திரை வாழ்க்கை அவரது குடும்பத்தினர் பார்த்து பார்த்து உருவாக்கியது. ஆரம்பத்தில் இவரது படங்களை ரிலீஸ் செய்தால், சுட்டு வெச்ச முட்டை போண்டாவும், போட்டு வச்ச டீயும் தியேட்டரில் வேலை செய்தவர்கள்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், படம் பார்க்க யாரும் வர மாட்டேன் என்கிறார்கள், டிக்கெட் விலையை குறைத்தும் போட்டுப் பார்த்து விட்டோம், யாரும் சீண்டக் கூட மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்பிய காலத்தில் இருந்து, நடிகர் இன்றைக்கு பல கோடிகள் சம்பளமாக வாங்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்.

A leading South Indian actor reportedly invested heavily in a new business influenced by a close companion with the venture now earning massive profits

ஆளும் நன்கு வாட்டசாட்டமாக இருப்பார் என்பதால் நடனம், ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரையே அதிரச் செய்கிறார். இப்படி இருக்கும்போது நடிகரின் திரை வாழ்க்கை எப்படி மெல்ல மெல்ல உயர்ந்ததோ, அதேபோல் இல்லற வாழ்க்கையும் நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது. நாம் இருவர், நமக்கு இருவர் என்று நன்றாகத்தான் இருந்தார்கள்.

பெண் பிரபலம்: நடிகர் ஒரு பார்ட்டி விரும்பி, குறைந்த பட்சம் மாதத்தில் இரண்டு முதல் மூன்று பார்ட்டிகளாவது அட்டன் செய்து விடுவாராம். அப்படி இருக்கும்போது ஒரு பார்ட்டியில் அவர் சந்தித்த பெண் பிரபலம் ஒருவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட நெருக்கம், எல்லைகளைக் கடந்து, அந்த பெண் பிரபலத்தின் பெயரில் சொத்து வாங்கும் அளவுக்கு நெருக்கம் கூடிவிட்டது. இது எல்லாம் தெரிந்து கொண்ட நடிகரின் மனைவி, முதலில் சண்டை போட்டு பார்த்துள்ளார், நடிகர் தனது செகண்ட் சேனலை விட்டு வரமாட்டார் என்று எண்ணம் வந்ததும், கடற்கரை ஓரமாக இருந்த நடிகரின் வீட்டை விட்டு மொத்தமாக வெளியேறிவிட்டார்.

புது பிசினஸ்: நடிகரும் அப்பாடா நிம்மதி, என தனது செகண்ட் சேனலை நேரடியாகவே தனது வீட்டிற்கு அழைத்து வருவதும் குடும்பம் நடத்துவதுமாக இருந்துள்ளார். செகண்ட் சேனல் சொன்ன காரணத்திற்காக வீட்டில் தினம் தோறும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக மாற்றி உள்ளார் நடிகர். நடிகர் போடும் ஆட்டத்தைப் பார்த்து பெற்றோர்கள் மனம் வருந்தி எவ்வளவோ சொன்னாலும், சொர்க்கம் மதுவிலே என்ற மிதப்பில் இருக்கிறாராம். இது மட்டும் இல்லாமல் செகண்ட் சேனல் சொன்னபடி பெரிய அளவில் பணத்தைக் கொட்டி ஒரு புது பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளார் நடிகர். பிசினஸில் சக்கை லாபம் கிடைக்கிறதாம், பல கோடிகள் அசால்ட்டாக புழங்குகிறதாம். ஆனால் எல்லாம் அந்த செகண்ட் சேனலின் வங்கிக் கணக்கிற்கு தான் போகிறாதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X