ஹீரோயின்களுடன் ரகசிய மீட்டிங்?.. கோலிவுட்டில் அடுத்த விவாகரத்துக்கு தயாராகும் முன்னணி நடிகர்?

By Staff

சென்னை: அந்த மியூசிக் பிரபலத்தை தொடர்ந்து அடுத்ததாக முன்னணி நடிகர் ஒருவரும் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இதுவரை பெரிதாக அந்த நடிகர் பற்றி எந்தவொரு கிசுகிசுவும் கிளம்பாத நிலையில், தற்போது குண்டை தூக்கிப் போட்டது போல ஒரு பெரிய தகவல் கசிந்து சினிமா வட்டாரத்தை ஷாக் ஆக்கியுள்ளது.

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் அந்த ஹீரோ பற்றி அதிகமாக கிசுகிசுக்கள் ஏதும் வரவில்லை. ஒரு சில நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருவதாக அவ்வப்போது பேச்சுக்கள் அடிபட்டாலும் உடனடியாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி விடும்.

gossip kollywood divorce

ஆனால், கடந்த சில மாதங்களாக சில இளம் நடிகைகளுடன் அடிக்கடி ரகசியமாக சந்திப்புகளை அந்த நடிகர் நடத்தி வருவது குறித்து சந்தேகத்துடன் மனைவி விசாரிக்க ஆரம்பித்தது தான் குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி வருவதாக கூறுகின்றனர்.

அடுத்த விவாகரத்து ரெடி?: தமிழ் சினிமாவில் இப்படியொரு விவாகரத்து கலாச்சாரம் அதிகமாக இல்லாமல் இருந்து வந்த நிலையில், சமீப காலமாக பல முன்னணி நடிகர்கள் குடும்ப வாழ்க்கையில் நீடிக்க முடியாமல் குழந்தைகள் எல்லாம் வயதுக்கு வந்த பின்னர் இப்படி விவாகரத்து செய்து பிரிந்து வாழும் முடிவுக்கு வருவது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

டாப் நடிகர்: சாக்லேட் பாயாகவும் ரக்கட் பாயாகவும் சினிமாவில் முடிந்த வரை வெரைட்டி காட்டி நடித்து வரும் அந்த நடிகர் விரைவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரியப் போவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இது முழுக்க முழுக்க வதந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் இப்படி நடக்கக் கூடாது என தகவல் தெரிந்த சினிமா பிரபலங்கள் சிலர் வேண்டாத குறையாக சினிமா வட்டாரத்தில் இதுகுறித்து பேசி வருகின்றனர்.

நடிகைகளுடன் ரகசிய மீட்டிங்: மனைவி மீது நடிகர் அன்பாக இருந்து வந்தாலும், அடிக்கடி சில நடிகைகளுடன் ரகசிய உறவில் இருந்து வந்தார் எனக் கூறப்பட்டாலும், அதற்கு எல்லாம் எந்தவொரு ஆதாரமும் மனைவிக்கு சிக்கவில்லையாம். ஆனால், சமீபத்தில் சில நடிகைகளும் சினிமா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனியாக ரகசியமாக பிரைவேட் ரெசார்ட்களில் நடிகர் பார்ட்டிக்கு சென்றது குறித்து நடிகரின் மனைவிக்கு சில தகவல்கள் கசிந்த நிலையில், வீட்டில் சண்டை வெடித்தது என்கின்றனர். கடந்த சில வாரங்களாக நடிகருடன் மனைவி பேசுவதே இல்லை என்றும் இருவரும் பிரிந்து விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X