போட்டி தான் பெருசா இருக்கு.. இண்டஸ்ட்ரி மேல அந்த ரெண்டு பேருக்குமே அக்கறை இல்லை.. விளாசிய பிரபலம்!
சென்னை: மற்ற மொழிகளில் எல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் போட்டியே இல்லாமல் வெளியாகி ரசிகர்களின் உதவியோடு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வருகிறது.
ஆனால், இங்கே மட்டும் இன்னமும் ரசிகர்கள் சண்டையை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் அந்த இரு பெரிய நடிகர்கள் என தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கடுமையாக சாடி உள்ளார்.
ஒரே நாளில் அந்த இரு உச்ச நடிகர்களின் படங்களும் வெளியானால், ஏகப்பட்ட இழப்பீடு நம்ம இண்டஸ்ட்ரிக்குத் தான் ஏற்படும் என்றும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

போட்டா போட்டி
பல ஆண்டுகளாக இந்த நடிகர் பெரியவரா? அந்த நடிகர் பெரியவரா? என ரசிகர்கள் கன்னா பின்னாவென அடித்துக் கொண்டாலும், கேவலமாக ட்ரோல் செய்தாலும், ரசிகர்கள் சண்டையை அமைதியாக இருவரும் வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டை பலரும் பல முறை வைத்து உள்ளனர்.

இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க முடியல
பாக்ஸ் ஆபிஸ் கிங் என மார்தட்டிக் கொள்ளும் அந்த இரு நடிகர்களும் இதுவரை ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கூட கொடுக்க முடியவில்லை என்றும், அட்லீஸ்ட் அனைத்து ரசிகர்களும் பார்க்கும்படியான படத்தையாவது கொடுக்கின்றனரா அதுவும் இல்லை என பகிரங்கமாகவே ஒரு பிரபல திரையரங்க உரிமையாளர் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சண்டை வரும்
இரு பிரபல நடிகர்களின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் தேவையில்லாத ரசிகர்கள் சண்டை தான் வரும். தியேட்டர்களை நாசம் செய்வார்கள். ஒருத்தர் படம் சரியில்லைன்னா கூட பெரிய பஞ்சாயத்தே உருவாகும் என்றும் கொஞ்சமாச்சும் இந்த இண்டஸ்ட்ரி மேல அக்கறை வச்சி அவங்க இறுதியான முடிவை சொல்லணும் என்றும் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தவிர்த்து வந்தனர்
ஏற்கனவே பல பிரச்சனைகள் அப்படி வெடித்த நிலையில், தான் நேரடி போட்டியை பல ஆண்டுகளாக இருவரும் தவிர்த்து வந்தனர். ஆனால், மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிளாஷை உருவாக்க வேண்டும் என்பதற்காக இம்முறை களமிறங்க போவதாக வெளியாகும் தகவல்களால் தியேட்டர் ஓனர்கள் லேசான அச்சத்திலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வசூல் குறையும்
இருவரது பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் அது இண்டஸ்ட்ரி ஹிட் எல்லாம் அடிக்காது. ஒரே அடியாக இரண்டு பேருக்கும் வசூல் தான் குறையும் அதை புரிந்து கொண்டு இரு வார இடைவெளியிலாவது படத்தை வெளியிட்டால் தான் லாபம் பார்க்க முடியும் என்றும் அவர் பேசியிருப்பதாக தகவல்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











