படப்பிடிப்பில் சண்டை.. நீ என்ன பொண்டாட்டியா?.. வில்லி நடிகையால் வந்த வினை? சீரியல் நடிகை கண்ணீர்!
சென்னை: சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அனைவருக்கும் பிடித்த அந்த ஜோடியின் காதல் முறிவு தான். பிரபலமான சேனலில் மக்கள் மனம் கவர்ந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து கணவரை விட்டு பிரிந்து, தனி பெண்ணாக தனது குழந்தையை வளர்த்து வருகிறார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து பல பேட்டிகளில் அவரே வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
டாப் சீரியல்: டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சீரியலில் பிஸியாக நடித்து வரும் அந்த நடிகை, அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகருடன் நெருக்கமாக பழகினார். திரையில் கணவன்-மனைவியாக நடித்த இந்த ஜோடி, சமூக வலைதளங்களிலும் ஒன்றாக இணைந்து பல ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தனர். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தால் நன்றாக இருக்கும் என சொல்லும் அளவிற்கு இவர்களின் ஜோடி பொருத்தம் பக்காவாக இருந்தது.

உறவில் விரிசல்: ஆனால், சில மாதங்களாக இந்த ஜோடியின் உறவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். வெளிநாட்டு சுற்றுலா, சினிமா நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். அதோடு மட்டுமில்லாமல் இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களிலும் ஜோடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், கடந்த சில மாதங்களாக இணைந்து எந்தவிதமான வீடியோவையும் வெளியிடவில்லை.
படப்பிடிப்பு தளத்தில் சண்டை: இவர்களின் பிரிவுக்கு காரணம் அதே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான். கொஞ்ச நாட்களாக அந்த நடிகர் வில்லி நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அடிக்கடி இருவரும் சேர்ந்து ரீல்ஸ், புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வந்துள்ளனர். படப்பிடிப்பின் போது இருவரும் அடிக்கும் லூட்டியை அடிப்பதை பார்த்த நடிகை கடுப்பாகி, வில்லி நடிகையுடன் சேரக்கூடாது, பேசக்கூடாது என படப்பிடிப்பு தளத்திலேயே சண்டை போட்டுள்ளார், நடிகையின் செயலால் கடுப்பான நடிகர், நீ என்ன என் பொண்டாட்டியா? என ஏக வசனத்தில் பேசி நடிகையை அசிங்கப்படுத்தி உள்ளார். இந்த விஷயம் பிரபல சேனல் நிர்வாகத்தின் காதுக்கு சென்று பெரிய பிரச்சனையாகிவிட, இருவரும் சீரியல் தான் முக்கியம் என முடிவு செய்து ரிலேஷன்ஷிப்பை முறித்துக்கொண்டனர். சீரியலுக்காக இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications