அந்த ஜோடி பிரிய காரணமே அந்த பிரபலம் தானா? காதல் வலை வீசியதால் தான் விவாகரத்து நடந்துச்சா?

By Staff

சென்னை: இளம் நட்சத்திர ஜோடி திடீரென திருமண வாழ்வை முறித்துக் கொள்ள காரணமே உடன் பணிபுரிந்த பிரபலம் ஒருவரின் காதல் வலை தான் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் அந்த இளம் நடிகை. வரிசையாக நடிப்பில் படு பிசியாக இருந்த அவர் கூட நடித்த நடிகரையே ஒரு கட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், மனக் கசப்பு காரணமாக அவர்கள் திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இளம் ஜோடி விவாகரத்து

இளம் ஜோடி விவாகரத்து

நடிப்பின் மீது அளவு கடந்த ஆர்வம் எழுந்ததால் மீடியாவுக்கு வந்த அந்த நடிகை கூட நடித்த நடிகர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா என புரபோஸ் செய்தவுடன் அவரும் மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவிக்க இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், திடீரென சமீபத்தில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகையை பிரிந்தார்

நடிகையை பிரிந்தார்

நடிகையை கன்வின்ஸ் செய்து காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நடிகர், திருமண வாழ்வில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடிகையை பிரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் விளைவாகவே இருவரும் விவாகரத்து வழக்கு நோக்கி நகர வேண்டிய சூழல் உருவானதாகவும் கூறப்பட்டது.

காரணம் யார்

காரணம் யார்

இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிவதற்கு முக்கிய காரணமே அந்த நடிகையின் கூடவே பணியாற்றிய அந்த பிரபலம் தான் என தற்போது பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளது பெரிய ஷாக்கிங்கை ஏற்படுத்தி உள்ளது. டிவி விஜேவான அந்த பிரபலத்துடன் நடிகை ஓவர் நெருக்கமாக பழகியது தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்கின்றனர்.

சிரித்து பேசினால் தப்பா

சிரித்து பேசினால் தப்பா

ஆனால், அதே நேரத்தில் இந்த விவகாரம் வெளியே கசிந்த நிலையில், அந்த நடிகை உடன் பணியாற்றும் நண்பருடன் சிரித்து பேசி பழகினால் தப்பா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார். அதற்காக எல்லாம் என் மேல் சந்தேகம் கொண்டு அவர் பிரிந்தால் பிரிந்து போகட்டும் என்றும் நடிகை தெளிவாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

அமைதியான பிரபலம்

அமைதியான பிரபலம்

இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபட்டுள்ள நிலையில், எந்தவொரு விளக்கமும் சொல்லாமல் அப்படியே அமைதி காத்து வருகிறாராம் அந்த பிரபலம். தனது தோழியின் வாழ்க்கை முடிவுக்கு வர தான் காரணம் என தெரிந்த நிலையில், அதை சரி செய்ய ஏன் அந்த விஜே எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை என கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X