அதுக்கு வரணும்னா எக்ஸ்ட்ரா செலவாகும்.. 'மி' எழுத்து நடிகை போட்ட கண்டிஷன்.. பதறிய தயாரிப்பாளர்?
சென்னை: மி எழுத்து நடிகை முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் பற்றி எரியத் தொடங்கி உள்ளன. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக சினிமாவில் அத்தனை வேலைகளையும் பார்த்து வந்த அவர் தற்போது அதெல்லாம் முடியாது என்றும் அதெல்லாம் செய்ய வேண்டும் என்றால் எக்ஸ்ட்ரா செலவாகும் என தயாரிப்பாளருக்கு வேட்டு வைத்து விட்டாராம்.
ஆரம்பத்தில் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என அனைத்தையும் அட்ஜெஸ்ட் செய்யும் நடிகைகள் அதன் பிறகு ராங்கித்தனம் காட்டி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி வருகின்றன.

சமீப காலமாக அந்த மி எழுத்து நடிகை இந்த விவகாரத்தில் வசமாக சிக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
பந்தா பண்ணும் நடிகை: முதலில் பவ்யமாக நடித்து வந்த நடிகைக்கு திடீரென அவருடைய மேனேஜர் கொம்பு சீவி விட்டார் போலத் தெரிகிறது உடனடியாக பந்தா பண்ண ஆரம்பித்து விட்டாராம். விரைவில் அவர் நடிப்பில் வெளியாக உள்ள படத்தின் புரமோஷனுக்கு நடிகை வரவே முடியாது என்றும் நம்பர் நடிகை ரூட்டை பின் தொடரப் போவதாகவும் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர்.
நடிகர் அப்செட்: இந்த நடிகை தான் வேண்டும் என விரும்பி நடிக்க வைத்த அந்த நடிகருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்கிற வகையில் தற்போது நடிகை பார்த்த வேலையால் தயாரிப்பாளர் முகத்தில் கூட நடிகர் முழிக்க முடியாத நிலையை நடிகை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.
எக்ஸ்ட்ரா காசு: கையில காசு, வாயில தோசை என்கிற ரேஞ்சுக்கு அந்த இளம் நடிகை ஆளே மாறிவிட்டார் என்றும் ஆரம்பத்தில் இப்படியெல்லாம் அலப்பறை செய்யாத அந்த நடிகை தற்போது அதிக சம்பளத்தை பெற்றுக் கொண்ட நிலையிலும், தற்போது பட புரமோஷனுக்கு வர வேண்டும் என்றால் கூடுதலாக துட்டுக் கொடுத்தால் வருவேன் என்றும் இல்லை என்றால் வர முடியாது என்றும் மறுத்து விட்டாராம். நடிகையின் இந்த முடிவால் அப்செட்டான தயாரிப்பாளர் நடிகரை மட்டுமே புரமோஷன்களில் பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
பிளாக் மார்க்: மேலும், நடிகை குறித்த பிளாக் மார்க்கையும் திரையுலகில் வைத்து விட்டதாகவும் தயாரிப்பாளர்களின் நலன் அறியாத நடிகை என முத்திரை குத்தி விட்டதாக கூறுகின்றனர். இதனால் அதிக படங்கள் அந்த நடிகைக்கு கிடைப்பதில் சிக்கல் உருவாகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











