Don't Miss!
- News
எப்போ கல்யாணம்.. பொண்ணு எப்படி இருக்கணும்? பட்டுனு வந்த கேள்வி! யோசிக்காமல் சட்டுனு பதிலளித்த ராகுல்
- Finance
10 மாதம் தான் ஆச்சு.. அதற்குள்ள வேலை போச்சு.. என்ன செய்யுறது.. 60 நாட்களுக்குள் வேலை கிடைக்குமா?
- Lifestyle
பெற்றோர்களே! நீங்க உங்க குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் விதம் அவங்க வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ரொம்ப பந்தா பண்றாராம் அந்த ஓவர் ஆக்டிங் நடிகை.. பேச்சிலும் தெனாவட்டு அதிகமாகிடுச்சு!
சென்னை: மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ள அந்த ஓவர் ஆக்டிங் நடிகை தயாரிப்பாளர்கள் காசை ரொம்பவே கரியாக்கி வருகிறாராம். மேலும், படப்பிடிப்பு தளத்தில் மட்டுமின்றி பப்ளிசிட்டிக்கு போகும் இடங்களிலும் அவர் பண்ணும் பந்தாவுக்கு ஒரு அளவே இல்லை என்கின்றனர்.
பான் இந்தியா அளவில் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அம்மணிக்கு தலை கால் புரியவே இல்லை என்றும் பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
மேலும், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்றால், பழைய இடத்தை மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்து விடுவது பலரையும் கடுப்பாக்கி உள்ளது.
அட நம்ம அண்ணாச்சியே சொல்லிட்டார்... விரைவில் தி லெஜண்ட்?: இனி ஆட்டம் அதிரடி தான்!

ரொம்ப தெனாவட்டு
நடிப்பில் ஒன்றும் பிரமாதமாக நடிக்கவில்லை என்றாலும், தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கும் அந்த நடிகைக்கு ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதும் அனைத்து இண்டஸ்ட்ரியிலும் அம்மணியை அழைத்து வரும் நிலையில், புகழின் உச்சத்தில் ரொம்பவே தெனாவட்டாக ஆடி வருகிறார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ஓவர் பந்தா
முன்பெல்லாம் நம்பர் நடிகை எந்தளவுக்கு பந்தா பண்ணிக் கொண்டு இருந்தாரோ தற்போது அவரையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்த ஓவர் ஆக்டிங் நடிகை பந்தா பண்ணி வருகிறாராம். சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கூட தனக்கு முன்னால் ஒரு காரும் பின்னால் ஒரு காரும் ஜிம் பாய்ஸ் உடன் பாதுகாப்புக்கு வேண்டும் என ரொம்பவே கண்டிஷன் போட்டு தயாரிப்பாளருக்கு பில் போட்டு விட்டார் என கோடம்பாக்கம் முழுவதும் புகையத் தொடங்கி உள்ளது.

மட்டம் தட்டுறாரு
ஒரு ஸ்டேட்டில் இருந்து இன்னொரு ஸ்டேட்டுக்கு படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்ததும் மற்ற மாநில ரசிகர்களுக்கு தான் பேசுவது என்ன தெரியவா போகுது என்கிற மிதப்பில் மட்டம் தட்டி பேசுகிறார் என்றும் சமீபத்தில் காதல் பாடல்கள் பற்றி அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பையே நடிகைக்கு அனுப்பி துவைத்து எடுத்து வருகின்றனர்.

நீடிக்காது
நம்பர் ஒன் நடிகைகளே தற்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விடும் நிலையில், புதிதாக வந்து விட்டு திமிருடன் ஆடக் கூடாது என்றும் அதன் பின்னர் வாய்ப்பு குறைந்தால் யாருமே கண்டுக்க மாட்டாங்க என்றும் ஒரு அளவுடன் நடந்து கொண்டால் அடுத்தடுத்த ரவுண்ட் வரும் போது கூட மதிப்பு இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்திலேயே பல பிரபலங்கள் நடிகைக்கு அட்வைஸ் வழங்கி வருகிறார்களாம்.