மூத்த நடிகர்கள் படத்தை எடுப்பார்களா? எல்லாமே ஒரே நாளில் மாறிடுச்சேப்பா? என்னதான் நிலவரம்?
சென்னை: தமிழ்நாடு அரசியல் சூழல் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு மொத்தமாக மாறிவிட்டது. மாஸ் நடிகர் கட்சியின் வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இப்படி இருக்கையில் சீனியர் நடிகர்கள் பலரும் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தது மட்டும் இல்லாமால், மாஸ் நடிகரின் கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கவில்லை.
மேலும் இப்போதுதான் கட்சி தொடங்கி உள்ளார், எனவே உடனே எல்லாம் அதிகாரத்திற்கு வர முடியாது என்று பலரும் தப்புக் கணக்கு போட்டதைப் போல அந்த சீனியர் நடிகர்களும் தப்புக் கணக்கு போட ஆரம்பித்தனர். இப்படி இருக்கையில் மாஸ் நடிகரின் படம் ரிலீஸ் ஆகாமல் போனதற்கு காரணம் அரசியல் தான் என்று ரசிகர்கள் பலரும் தெரிவித்தனர். அதேபோல், மாஸ் நடிகரின் படம் இணையத்தில் லீக் ஆனதற்கு காரணமும் அரசியல் தான் என்றும் கூறினார்கள்.

சீனியர் நடிகர்கள்: இப்படி இருக்கையில் சீனியர் நடிகர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதுவும், அந்த படத்தின் படிப்பிடிப்பு சீக்கிரமே தொடங்கவுள்ளது என்று எல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. இப்படி இருக்கையில், தற்போது தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மொத்தமாக மாறி உள்ளதால், சீனியர் நடிகர்கள் இணைந்து நடிக்கும் படம் உருவாகுமா? அல்லது தயாரிப்பாளர் மாறுவாரா என்று எல்லாம் கூட பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டது.
கரும்புள்ளி: அதே நேரத்தில் மாஸ் நடிகர் இது போன்ற விஷயங்களில் தலையிட்டு தனது அரசியல் பக்கத்தில் கரும்புள்ளிகளை வைக்க நினைக்க மாட்டார். அவர் மக்களுக்கு நல்லது செய்வதில் தான் அதிக கவனம் செலுத்துவார் என்று நடிகரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அதிகாரம் கையில் வந்த பின்னர் யார் எப்படி மாறுவார்கள் என்று கடந்த காலங்களில் பல முறை பார்த்திருக்கிறோம், அப்படி இருக்கையில், இவர்களும் அதிகாரத்திற்கு வந்த பின்னர்தான் எதுவும் சொல்ல முடியும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருவதையும் பார்க்க முடிகிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications