பவர் நடிகரின் விஸ்வரூபம்.. கையே போனது போல அப்செட்டில் இருக்கும் அக்கட தேசத்து சகோதரர்கள்

By Staff

சென்னை: சினிமாவில் நன்றாக கல்லா கட்டி வரும் நடிகர்கள் திடீரென தொழிலை மாற்றுகிறேன் என்று குபீர் என வேறு துறையில் கவனம் செலுத்துவது வாடிக்கையானது தான். ஆனால் ஒரு நடிகர் செய்த தொழிலைப் போல மற்றொ நடிகர் செய்வதோ, அல்லது அதே பாணியை பின்பற்றுவதோ செய்ய மாட்டார்கள். காரணம் அந்த நடிகரை அப்படியே அட்டைக் காப்பி அடிக்கிறார், இவருக்கு என்று சொந்த புத்தி எல்லாம் எதுவும் இல்லை என்று விமர்சித்து இமேஜை டேமேஜ் செய்துவிடுவார்கள் என்பது தான்.

அப்படி இருக்கும் போது, இந்த பவர் நடிகர் ஏற்கனவே ஒரு நடிகர் தேர்வு செய்த துறையிலேயே தனது புதிய தொழிலைத் தொடங்கினார். அந்த அக்கட தேசத்து நடிகரோ சினிமாவில் இருந்து கொண்டும், அந்த புதுத் தொழிலைச் செய்து கொண்டு இருந்தார். இது மட்டும் இல்லாமல் அந்த அக்கட தேசத்து நடிகரோ, தனது புதிய தொழிலிலும் சக்சஸ் ஆனார். ஆனால் என்ன இரண்டாம் இடத்தைத்தான் பெற்றார். அப்படி இருக்கும்போது, இந்த பவர் நடிகரோ, அந்த அக்கட தேசத்து நடிகர் செய்யும் அனைத்தையும் பின்பற்றுவதில் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் ரிசல்ட் அந்த அக்கட தேசத்து நடிகரைப் போல இரண்டாவது இடத்தில் இருக்க கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தார்.

Power Actor s Massive Business Growth Shocks Telugu Star Brothers Kollywood Buzz Turns Viral

ஒர்க் அவுட் ஆன பவர் நடிகர் பிளான்: அதற்காக சினிமாவை முற்றிலும் கை விடுவது என்ற முடிவை அவர் எடுத்ததால், பவர் நடிகருக்கு ஒரு பெரிய பிளஸ் பாய்ண்டாக மாறிப் போனது. இதனால் அவருக்கு புதிய தொழிலில் அவர் எதிர்பார்த்ததை விடவும் மார்க்கெட் சாதகமாக அமைந்தது. தொடக்கத்தில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ள பவர் நடிகர் தயாராக இருந்தாலும் யாரும் முன்வராததால், தனது தொழிலை எந்த விதமான தொய்வும் இல்லாமல் நடத்தில் அதில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கும் சென்று விட்டார்.

அப்செட்டில் அக்கட தேச நடிகர்கள்: இந்த பவர் நடிகர் தான் தொடங்கிய தொழிலில் எல்லாமே நம்மைப் பார்த்துதான் காப்பி அடிக்கிறார், எல்லாரும் சூனா பானா ஆகிட முடியுமா? இந்த தலைமுறையில் சினிமாவில் இருந்து வந்து இந்த தொழிலில் சக்சஸ் ஆன ஒரே நடிகர் நான் தான் என்று அக்கட தேசத்து நடிகரும் அவரது சகோதரரும் மார் தட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் தற்போது இந்த பவர் நடிகர் தான் தொடங்கிய தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை ஓரம் கட்டிவிட்டு, முதல் இடத்தை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார். இதனால் அக்கட தேசத்து நடிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X