மேல் மட்டத்தில் பவர் நடிகரின் எல்லா பிளானும் சக்சஸ்.. ஆனாலும் இந்த பிரச்னையை தீர்க்க முடியலயாம்

By Staff

சென்னை: இந்த பவர் நடிகர் ரொம்பவே சைலண்ட் ஆனவர், ஆனால் ஆக்‌ஷன் என்று இயக்குநர் கூறிவிட்டால் நொடிப்பொழுதில் எங்கிருந்துதான் அப்படியொரு எனர்ஜியை கொண்டு வந்து நடிப்பாரோ என்று பலரும் வியந்துள்ளார்கள். அமைதியாக இருப்பது பவர் நடிகரின் குணம் என்றால், அவர் அமைதியாக இருந்து கொண்டே பல விஷயங்களைச் சாதித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரால் ஒரு பிரச்னையை மட்டும் தீர்க்கவே முடியல என்று புலம்பி வருகிறாராம்.

அதாவது பவர் நடிகர் தனது எதிரிகளை துவம்சம் செய்தது மட்டும் இல்லாமல், அவர்களுடன் இருந்தவர்களை வளைத்து தன்னை பலப்படுத்திக் கொண்டுவிட்டார். இதற்காக பவர் நடிகர் பட்ட பாடும் எதிர் கொண்ட நெருக்கடிகளும் சொல்லித் தீர்க்க முடியாது. அப்படி இருக்கும் போதும், நடிகர் தனது அமைதியான குணத்தாலும் பொறுமையாலும் எல்லாவற்றையும் சக்சஸ் செய்து அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கிறார்.

Power Actor Troubled by Fans Viral Rumours Silent Star Reportedly Upset Over Online Damage

பறக்கும் மானம்: இப்படி இருக்கையில் இந்த பவர் நடிகரின் பெயரை சொல்லிக் கொண்டு அவரது ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டியை அவரால் கட்டுப்படுத்தவே முடியலயாம். அது மட்டும் இல்லாமல், நடிகரின் பெயரைச் சொல்லி பல பொய் தகவல்களை உண்மை போல பகிர்ந்து வருகிறார்களாம். இப்படி பகிரப்படும் பொய் தகவல்கள் அனைத்தும் அவரது எதிர் கூடாரத்தில் இருப்பவர்களால் தோலுரிக்கப்பட்டு வருவதால், நடிகரின் மானமே போகுதாம். இதனால் நடிகரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

தீராத குழப்பம்: நடிகரின் குழப்பத்தைத் தெரிந்து கொண்ட மிகவும் வேண்டப்பட்டவர், நீங்க விடுங்க தலைவரே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, இப்படி தேவையில்லாத வேலைகளைச் செய்து தலைவருக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், மன உளைச்சலுக்கும் அளாக்காதீர்கள் என்றும் காட்டமாக தெரிவித்துவிட்டாராம். இதனால் நடிகரின் ரசிகர்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கலாம் என்று முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அந்த ரசிகர்களோ தலைவருக்கு எவ்வளவு பெருந்தன்மை பார்த்தியா அவரைப் பற்றி புகழ வேண்டாம் என்று மறைமுகமாக சொல்கிறார் எனப் புரிந்து கொண்டு, அதைத் தனியாக பரப்பி வருகிறார்களாம். இதனால் பவர் நடிகர் மேலும் டென்சனில் இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X