உன்னை நம்பி அத்தனை கோடியெல்லாம் போடமுடியாது தம்பி.. வம்பு நடிகருக்கு டாட்டா காட்டிய பைனான்சியர்கள்?
சென்னை: குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை எடுத்து ஹிட் கொடுப்பதை விட்டு விட்டு பெரிய பட்ஜெட்டில் பில்டப் படங்களை எடுத்து ஓவர் நைட்டில் பான் இந்தியா நடிகராக மாறிவிட வேண்டும் என்கிற வியாதி சமீப காலமாக சில கோலிவுட் நடிகர்களை பிடித்துக் கொண்டு ஆட்டி வருவதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.
சமீபத்தில் தான் ஒருவர் பேராசைப் பட்டு பெரு நஷ்டத்துடன் தயாரிப்பாளருக்கும் தனக்கும் சேர்த்து பெரிய போர்வையாக வாங்கி போர்த்திக் கொண்டு திரிகிறார் என கடுமையான கேலி கிண்டல்கள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அதே போல இன்னொரு நடிகரும் அந்த முயற்சிக்காக பல வருடங்களை வீணடித்து வருகிறார் என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.

சிறிய பட்ஜெட்டில் நல்ல நல்ல படங்கள் வெளியாகி பெரிய வெற்றிகளை இந்த ஆண்டு குவித்து வரும் நிலையில், கொக்கு போல ஒற்றைக் காலில் நின்றுக் கொண்டு அடம்பிடிக்கும் அந்த வம்பு நடிகருக்கு அவர் நினைத்தது போல அந்த படத்தை ஆரம்பிக்க தாமதமாக காரணமே பைசா பிரச்சனை தான் என்கின்றனர்.
மாட்டிக்கினாரு இயக்குநர்: எடுத்த ஒரே ஒரு படத்திலேயே தனது திறமையை காட்டிய இயக்குநர் கடந்த சில ஆண்டுகளாக உச்ச நடிகர் முதல் உச்ச நடிகரை காப்பியடித்து வளர்ந்த வம்பு நடிகர் வரை சிக்கிக் கொண்டு அடுத்த படத்தை ஆரம்பிக்கவே முடியாமல் அழுது புலம்பி வருகிறார் என்கின்றனர். உதவி இயக்குநர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், படம் ஆரம்பித்தால் சொல்கிறேன், அப்போ வந்து சேருங்க என அனுப்பி வைத்து விட்டாராம்.
பட்டத்தை துறந்த நடிகர் கைவிரிப்பு: காலம் போன காலத்தில் ஞானம் வந்து தனது பட்டத்தை துறந்த பாஸ் நடிகர் தம்பி நீங்களும் வாங்களே நாம படம் பண்ணலாம் என உச்ச நடிகருக்கு போட்டியாக களத்தில் குதிக்க நினைத்து, அதன் பின்னர் நடிகரின் மார்க்கெட் மற்றும் பிசினஸ் இருக்கும் லட்சணத்தில் தலையை கொடுத்தால் துண்டாக போய்விடும் என்பதால், அப்புறம் பார்க்கலாம் சகோதரா என அனுப்பி வைத்து விட்டாராம்.
பைனான்சியர் கிடைக்கல: பெரிய பட்ஜெட்டில் வாளேந்தி வம்பு நடிகர் ஆக்ரோஷமாக கத்தி ரசிகர்களின் காதுகளை கிழிக்க காத்திருக்கும் படத்துக்கு ஆரம்பத்திலேயே அடிமேல் அடி விழுந்து வருகிறது என்கின்றனர். கடந்த சில வருடங்களாக படம் ஆரம்பிக்காமல் இருக்க காரணமே சரியான பைனான்சியர் அமையாதது தான் என பேச்சுக்கள் மெல்ல கசிந்து வருகின்றன. தம்பி கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு என்றும் உன்னை நம்பி அவ்ளோ பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தால் ரிட்டர்ன் வருமா என்பது சந்தேகம் தான் என பலரும் டாட்டா காட்டி வருவதால் தான் நடிகர் ரொம்பவே அப்செட்டாக உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
லெவலே மாறிடும்: ஆனால், நடிகருக்கு அந்த படம் ஆரம்பித்து வெளியானால், அவருடைய லெவலே மாறிவிடும் என்கிற நம்பிக்கை அதிகமாகவே உள்ள நிலையில், எப்படியாவது இந்த புராஜெக்ட்டை ஆரம்பித்துவிட வேண்டும் என்கிற வெறியில் தீவிரமாக சில மும்பை பைனான்ஸியர்களையும் சந்தித்து பேசி வருகிறார் என்கின்றனர். எல்லாம் நல்லதாவே நடந்தால் சரி தான் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











