புலம்பலில் பவர் நடிகர்.. பர்ஷ்னல் விஷயத்துக்காக நச்சரிக்கும் நட்பு வட்டாரங்கள்.. ஓவர் குடைச்சலாம்

By Staff

சென்னை: தென்னிந்திய சினிமாவில் பவர் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒருவர், சமீப காலமாக தனது படங்களை விட தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்விகளால் அதிகம் சோர்வடைந்து வருகிறாராம். குறிப்பாக, அவரது நட்பு வட்டாரத்தினர் தொடர்ந்து ஒரே விஷயத்தை பற்றி கேட்டுக் கொண்டே இருப்பதால், நடிகர் தற்போது புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது, சினிமா கேரியரில் உச்சத்தில் இருக்கும் அந்த நடிகர், தற்போது தனது புது பிசினஸின் அடுத்தடுத்த வளர்ச்சியில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறாராம். ஒரு பக்கம் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் விளம்பர நிகழ்ச்சிகள், வெளிநாட்டு பயணங்கள் என தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில், அவரது பர்சனல் வாழ்க்கை குறித்த பேச்சுகளும் அடிக்கடி கிளம்பி வருகின்றன.

இப்படி இருக்கையில், நடிகரின் நெருங்கிய நண்பர்கள் சிலர், "அடுத்த கட்ட முடிவு எப்போது?", "இன்னும் எவ்வளவு நாள் இப்படி இருப்பீர்கள்?", "சுற்றி உள்ள சர்ச்சைகளை முடித்துவிட்டு, சீக்கிரமே ரகசிய வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக எண்ணம்?" என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

Power Star Tired of Personal Questions Friends Constant Pressure Sparks Buzz

ஆரம்பத்தில் இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொண்ட நடிகர், தற்போது அதே கேள்விகள் மீண்டும் மீண்டும் வருவதால் கொஞ்சம் அப்செட்டாகி விட்டாராம். குறிப்பாக எந்த சந்திப்பாக இருந்தாலும், பேச்சு இறுதியில் அதே விஷயத்திற்கே திரும்பி வருவதால், "வேற எதுவுமே பேச மாட்டீங்களா?" என்று நண்பர்களிடமே கேட்டிருக்கிறாராம்.

நண்பர்கள் நச்சரிப்பு: இந்நிலையில், நடிகரின் குடும்பத்தினர் கூட அந்த விஷயத்தில் பெரிதாக அழுத்தம் கொடுக்காமல் இருக்கும் நிலையில், நண்பர்கள்தான் ஓவர் அக்கறை காட்டி நச்சரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில சமயங்களில் அவர்களது போனை கூட எடுக்காமல் நடிகர் தவிர்த்து வருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

மேலும், சமீபத்தில் நடந்த ஒரு தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சியிலும் நண்பர்கள் கூட்டமாக சேர்ந்து அதே விஷயத்தை எடுத்துப் பேசியதாகவும், அப்போது நடிகர் "எனக்கு நேரம் வரும்போது நான் சொல்றேன்... அதுவரைக்கும் இந்த டாபிக்கை விட்டுடுங்க" என்று அரை கோபத்திலும் அரை சிரிப்பிலும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வாழ்க்கை: மற்றொருபுறம், நடிகருக்கு நெருக்கமான சிலர், "அவர் வாழ்க்கையை அவர் பார்த்துக்கொள்வார். தேவையில்லாமல் குடைச்சல் கொடுக்காதீர்கள்" என்று நண்பர்கள் வட்டாரத்தினரையே சமாதானப்படுத்தி வருகிறார்களாம்.

சினிமா சம்பந்தப்பட்ட பிரச்னைகளை கூட கூலாக சமாளித்து வரும் பவர் நடிகருக்கு, தற்போது நண்பர்களின் ஓவர் அக்கறைதான் பெரிய தலைவலியாக மாறியிருப்பதாகவும், பர்சனல் விஷயத்தில் தொடர்ந்து வரும் கேள்விகளால் அவர் புலம்பித் தவிப்பதாகவும் கோலிவுட் கிசுகிசு வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X