»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

கம்பீரம் படத்தின் நாயகி ரொம்ப வேகமாக இருக்கிறார். நடிப்பதில் அல்ல, காதலில்

மலையாள குயிலான ப்ரணதி, கம்பீரம் படத்தில் சரத்குமாருடன் அறிமுகமானார். கம்பீரம் படத்திற்குப் பிறகு பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று ஆரூடம் கூறினார்கள் கோலிவுட் ஜோசியர்கள். ஆனால் யார் கண் பட்டதோ, ப்ரணதி எடுபடாமல் போனார்.

இடையில் தாய் மொழியான மலையாளத்தில் 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நடித்தார். அதிலும் கோபிகாவை முன்னிருத்தி ப்ரணதியை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். ப்ரணதிதான் படத்தின் ஹீரோயின். இருந்தாலும், இரண்டாவது ஹீரோயினாக கோபிகாவே பேசப்பட்டார்.

இடையில் சில கோ-ஆர்டினேட்டர் சேட்டன்கள் மற்றும் டிவி விளம்பர டைரக்டர்களாக இருக்கும் மலையாளிகள் உதவியுடன் சேலை விளம்பரம், நகை விளம்பரம் என காலத்தை தள்ளி வந்தார்.

அவருடைய உடல் வாகுதான் பிரச்சினைக்குக் காரணம் என யாரோ ஒரு புண்ணியவான் ப்ரணதியின் காதில் போட, உடனே உடலைக் குறைத்தார். அவரே ஆச்சரியப்படும்படியாக உடனடியாக ஒரு பட வாய்ப்பு வந்தது. அதுவும் தமிழில்.

படத்தின் பெயர் குருதேவா. இதில் ஜெய் ஆகாஷுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் படு ஆட்டம் போட்டிருக்கிறாராம் ப்ரணதி. தனது எதிர்காலமே இந்தப் படத்தில்தான் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு நடித்து வருகிறார்.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். படத்தில் நடிக்கத் தொடங்கிய முதல் நாலே ஆகாஷிடம் ப்ரணதிக்கு நட்பு ஏற்பட்டு விட்டதாம். நாளுக்கு நாள் இந்த நட்பு தண்ணீர் ஊற்றிய சிமெண்ட் மாதிரி இறுகி இப்போது காதலாக மாறியுள்ளதாக பேசுகிறார்கள்.

ஷூட்டிங்கில் மட்டுமல்லாமல் வெளியிலும் இருவரும் காதல் மொழி பேசித் திரிகிறார்கள். இருவரையும் அடிக்கடி சேர்ந்தார்போல சென்னையின் பல இடங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களில்.

இந்த நட்பு படத்துக்கும் பலம் சேர்க்கும் என்று நினைத்தோ என்னவோ இயக்குனர் ஜாபர் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் இந்த ஜோடியின் காதல் லீலைகளை கண்டும் காணாமல் இருந்து கொள்கிறார் இயக்குனர்.

ஆனால், ஹீரோவுடனான நட்பை காரணமாக வைத்துக் கொண்டு சூட்டிங் ஸ்பாட்டில் ஏக அலும்பு செய்து வருகிறாராம் ப்ரணதி. குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு ஏக டார்ச்சர். அவருக்கு ஹீரோவும் சப்போர்ட் என்பதால் தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் அமைதி காத்து வருகிறார்கள்.

இந்த ஜெய் ஆகாஷ் பெரும் பண பார்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குவாலாவான இவர், லண்டனில் செட்டல் ஆனவர். தெலுங்குப் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். இவர் நடித்து ஒரு படமும் இதுவரை ஓடவில்லை.

ஆனாலும் இவரது கை நிறைய ஏகப்பட்ட வாய்ப்புக்கள். ஹீரோவாகப் போட்டால் பணமும் கொடுக்கிறாரே. நம்மவர்கள் விடுவார்கள்.

வெள்ளி, வெள்ளிகிழமை பூ, பழம், ஊதுவத்தி வாங்கி ஏதாவது ஒரு படத்துக்கு ஜெய் ஆகாஷை வைத்து பூஜை போடுவது இப்போது கோடம்பாக்கத்தில் வழக்கமாகவே போய்விட்டது.

வசதி பார்ட்டியான ப்ரணதியையும் வளைத்துவிட்டார் என்கிறது கோடம்பாக்கம். கூடவே ஜெய் ஆகாஷ் ஏற்கனவே திருமணமானவர் என்றும் புகைய விடுகிறார்கள்.

மேலும் இந்தக் காதலுக்கு ஆகாஷின் வீட்டில் கடும் எதிர்ப்பாம். ஆனால், ஆகாஷை விட்டுவிடாதே என்று ப்ரணதிக்கு அவரது தாய்க்குலம் முழு சப்போர்ட்டாம்.

இன்னொரு விஷேசம் தெரியுமோ?.. பேசிக்கலி கேரளத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ப்ரணதி மிஸ் மெட்ராஸ் போட்டில் பங்கேற்று வென்றவராம். டிசைனர் உடைகளில் ஆர்வம் கொண்ட அவர், தான் அணியும் உடைகளை சொந்தமாக டிசைன் செய்து கொள்கிறாராம்.

இந்த உடைகளின் செலவை பல மடங்காக தயாரிப்பாளர்களிடம் பில் போட்டு வசூலித்துவிடுகிறார்.

Read more about: actress, bipasa, cinema, film, kamal, ramya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil