»   »  பூ நடிகையை காப்பாற்றிய மாமா!

பூ நடிகையை காப்பாற்றிய மாமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விபச்சார தாதாவாக வலம் வந்த கன்னட பிரசாத்துக்கு மொத்தம் 7 மனைவிகள் என்பது தெரிய வந்துள்ளது.


பெங்களூரில் பிறந்து, சென்னைக்கு இடம் பெயர்ந்து விபச்சார உலகின் தனிப் பெரும் சாம்ராஜ்யத்தை நிர்மானித்து, அதை ஹை டெக்காகநிர்வகித்து கடந்த 20 வருடங்களாக கலக்கி வந்தவர் கன்னட பிரசாத்.

விபச்சாரத் தொழிலில் புதிய சாதனையை படைத்துள்ள பிரசாத் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார், அவரது தொழில் பட்டியலில் இருந்தநடிகைகள், துணை நடிகைகள், அழகிகள் எண்ணிக்கையை போலீஸார் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னட பிரசாத் குறித்த பல திடுக்கிடும், தில்லாலங்கடி தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. காலையில் ஒரு தகவல் வந்தால்,மாலையில் இன்னொரு பரபரப்புத் தகவல் வெளியாகி போலீஸாரையே பயமுறுத்தி வருகிறது.

நீலாங்கரை பகுதியில் ஒரு பங்களாவை மாதம் 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார் பிரசாத். விவிஐபிகளுக்கு இங்குதான்நடிகைகளை விருந்தாக அளிப்பாராம்.

பல முன்னணி நடிகைகள் இங்குதான் பலமுறை சோரம் போயுள்ளனர். யாரெல்லாம் இங்கு வந்து போனார்கள் என்ற விவரத்தைபிரசாத்திடமிருந்து கறக்க போலீஸார் தயாராகி வருகின்றனர்.


கன்னட பிரசாத் பெண்களை தொழிலில் இறக்குவதே வித்தியாசமான ஸ்டலாைக உள்ளது. அழகான பெண்களை குறி வைத்து அவர்களை தனதுவலையில் விழ வைப்பார். பின்னர் அந்தப் பெண்களை முதலில் அவர் ருசி பார்ப்பார்.

ஆசை தீர அனுபவித்த பின்னர் அவர்களை பொதுப் பட்டியலில் சேர்ப்பாராம். இவ்வாறு நூற்றுக்கணக்கான அழகிகளை அவர் தொழிலில்ஈடுபடுத்தி வந்துள்ளார்.

பெண்களை வைத்து தொழில் நடத்தி பெரும் பணம் பார்த்து வந்த பிரசாத்துக்கு பிறந்தது இரண்டும் பெண் குழந்தைகள். இதனால் அவர்சோர்வடைந்தார். ஆண் வாரிசு வேண்டும் என்று விரும்பிய அவர் அடுத்தடுத்து 7 பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் விதியோஎன்னவோ அவருக்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை.

பெண்களை வைத்து தொழில் செய்து வந்த தனக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது என்று புலம்பிக் கொள்வாராம் பிரசாத். தினசரி மதுஅருந்தும் பழக்கம் உண்டாம் பிரசாத்துக்கு.

மொத்தம் 7 மனைவிகள் இருந்தாலும் 3வது மனைவியான குசூம் மீதுதான் பிரசாத்துக்கு காதலும், ஆசையும் அதிகமாம். குசூம் அஸ்ஸாம் மாநிலப்பெண். அவரும் பிரசாத் மீது படு ஆசையாக இருந்துள்ளார்.


குசூமின் பிறந்த நாளை சமீபத்தில்தான் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விமரிசயாைக கொண்டாடினார் பிரசாத். தனது நண்பர்களைஅழைத்து மது விருந்தும் கொடுத்து அசத்தியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் போலீஸ் வசம் தற்போது சிக்கியுள்ளன. அந்த விருந்துக்கு வந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார்விசாரித்து வருகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு ஆட்டோ சங்கரும் இப்படித்தான் பல நடிகைகள், துணை நடிகைகளை வைத்து பெரிய அளவில் விபச்சாரத் தொழிலைநடத்தி வந்தார். அவரது பட்டியலிலும் பெரிய பெரிய நடிகைகள் இருந்தனர்.

ஆனால் ஆட்டோ சங்கர் லோக்கல் லெவலில் ஈடுபட்டிருந்தார், பிரசாத்தைப் பார்த்தால் இன்டர்நேஷனல் லெவலில் இருக்கும் போலத் தெரிகிறது.

இவரிடம் தொடர்பில் இருந்த பிஷ் நடிகையை ஒரு தொழிலபதிபருக்கு நீலாங்கரை பங்களாவில் வைத்து விருந்து தந்திருக்கிறார் பிரசாத்.அப்போது தகவல் அறிந்து போலீஸ் வந்துவிட, நடிகை அழுது புலம்பி, கதறினாராம். அவரை வீட்டின் பின் பக்கம் வழியாக தப்பியோடச்செய்தாராம். அவர் நெடு நேரம் பின் பக்கம் இருந்த குப்பை மேட்டில் பதுங்கியிருந்துவிட்டு தப்பியோடிருக்கிறார்.

அதே போல முன்னணியில் இருந்த பூ பெயர் கொண்ட நடிகையை தனது வீட்டில் வைத்து ஒரு பண முதலைக்கு விருந்து தந்தபோது போலீஸ்வந்திருக்கிறது. இதைப் பார்த்து நடிகை அலற, போலீசாரை திசை திருப்ப தூக்கில் தொங்குவது போல நடித்திருக்கிறான் பிரசாத். இதையடுத்துவம்பில் மாட்ட விரும்பாத விபச்சார தடுப்பு போலீஸ் இடத்தை காலி செய்துவிட நடிகையை பத்திரமாக அனுப்பி வைத்தாராம்.

இந்த தகவல்களை எல்லாம் போலீசிடம் புட்டு புட்டு வைத்திருக்கிறார் பிரசாத்.

Read more about: kannada prasads seven wives

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil