»   »  மாமா பட்டியலில் நதி நடிகை?

மாமா பட்டியலில் நதி நடிகை?

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில், தென் மாவட்டத்தில் பாயும் ஒரு முக்கிய நதியின் பெயரில் வெளியான படத்தில் நடித்த இரண்டெழுத்து நடிகையும்கன்னட பிரசாத்தின் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரை வைத்து பெரிய அளவில் தொழில் நடத்தி வந்த கன்னடபிரசாத் இப்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்.

அவருடன் தொடர்புடைய நடிகைகள் குறித்த பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர். பிரசாத்தின்கஸ்டமர் கேர் லிஸ்ட்டில் உள்ள நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட வருகிறது.

சமீபத்திய வரவான இரண்டெழுத்து நடிகையையும் (நதி படத்தில் நடித்தவர்) கூட பிரசாத் தனது லிஸ்ட்டில்சேர்த்து விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படம் வெளியானது முதல் இந்த நடிகையை ஏற்பாடு செய்து தருமாறு பிரசாத்திடம், பலதொழிலதிபர்கள் நச்சரித்து வந்தனராம். பிரசாத்தும் நடிகையைத் தொடர்பு கொண்டு தன்னைப் பற்றி அறிமுகம்செய்து கொண்டு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாராம்.

ஆனால் பிரசாத் வழியாக நடிகை எங்கேனும் பாய்ந்தாரா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.அதுதொடர்பாக வாய் திறக்க மறுத்து வருகிறார் பிரசாத்.

இதேபோல மல்லிகைப் பூ நடிகையை சில மாதங்களுக்கு முன் ஒரு போலீஸ் அதிகாரியிடம் அனுப்பிவைத்தாராம் பிரசாத். ஹோட்டலில் வைத்து இந்த உல்லாச சந்திப்பு உற்சாகமாக அரங்கேறியதாம்.

தற்போது பிரசாத் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லேட்டஸ்ட்டாக ஒரு கொலை முயற்சிவழக்கும் பிரசாத் மீது பாய்ந்துள்ளது. தன்னை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்றதாக பிரசாத் மீதுமத்திய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் புகார் கொடுத்துள்ளார்.

இதை ஏற்று பிரசாத் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழும் பிரசாத்தைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கூட்டாளிகள் மீது கடும் நடவடிக்கை: லத்திகா

இதற்கிடையே, கன்னட பிரசாத்திற்கு உதவியாக இருந்த முக்கிய புள்ளிகள் உள்ளிட்டோரிடம் விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர்லத்திகா சரண் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இத்தனை வருடமாக விபச்சாரத் தொழில் செய்வதற்கு பிரசாத்துக்கு நிறையப் பேர் உடந்தையாகவும், உதவியாகவும் இருந்துள்ளனர். அவர்கள் குறித்த விவரங்களும், செல்போன்எண்களும் கிடைத்துள்ளன.

அவர்கள் குறித்த விவரங்களை அறிய கன்னடப் பிரசாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். அப்போது தனக்கு உதவியாக இருந்தவர்கள் குறித்து தகவல்களை பிரசாத் கூறியுள்ளார்.

அவர்கள் எந்த வகையில் உதவினார்கள், என்னென்ன உதவிகள் செய்தார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil