நியூ ஸ்டோரி.. அது காரணம் இல்லையாம்.. சமத்து நடிகை விலக.. அவர் தான் காரணமாம்!

சென்னை: கர்ப்பமாக இருந்தால், அந்த நடிகை ஏன் ரெளடி இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, தற்போது, வெளியேறி உள்ளார். இந்த விஷயத்தில் சமத்து நடிகை வெளியேற காரணமே வேறு என்கின்றனர்.

ரெளடி இயக்குநரின் புதிய படத்தில், நம்பர் நடிகை மற்றும் வில்லன் நடிகருடன் இணைந்து நடிக்க சமத்து நடிகை ஓகே சொல்லி இருந்தார்.

காதலர் தினத்தன்று அந்த படம் குறித்த அதிரடி அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

வெளிநடப்பு

வெளிநடப்பு

வாவ்.. என்ன ஒரு சூப்பர் காம்போ, படம் வெளியானால், வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் நினைத்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கீழே தரையே இல்லாதது போல, அதள பாதாளத்தில் கொண்டு சேர்த்தது அந்த சமத்து நடிகையின் வெளிநடப்பு அறிவிப்பு.

கர்ப்பம் தான் காரணம்

கர்ப்பம் தான் காரணம்

சமத்து நடிகை ரெளடி இயக்குநர் படத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், சமூக வலைதளங்களில் அவர் கர்ப்பமாக இருப்பது தான் இந்த வெளிநடப்புக்கு காரணம் என வைரலாக பரவியது. ஆனால், காரணம் அது இல்லை என்றும், அப்படி இருந்தால், அவர் நடிக்க எப்படி ஒப்பந்தம் போட்டிருப்பார் என்ற கேள்வியும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

நம்பர் நாயகியா

நம்பர் நாயகியா

பின்னே என்ன தான் பாஸ் காரணம், ஓ அந்த நம்பர் நடிகைக்கு முக்கியத்துவம் அதிகமாக தரப்படுகிறது. சமத்து நடிகையை சட்டையே செய்வதில்லை என்ற சப்பைக் காரணத்தை சொல்லப் போகிறீர்களா என்று கேட்பது நன்றாகவே கேட்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் அந்த நபர் நம்பர் நடிகை இல்லை.

என்ன தான் பிரச்சனை

என்ன தான் பிரச்சனை

தாமதமாகும் படப்பிடிப்பு தான் அந்த சமத்து நடிகை, படத்தில் இருந்து விலக காரணமாம். பாலிவுட் படத்துக்காக அந்த வில்லன் நடிகர், அதிகளவில் எடை குறைத்து, பல மாதங்கள் இந்தி படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி உள்ளதால், வெறும் அறிவிப்போடு, அந்த படம் காத்து வாங்குகிறதாம்.

எஸ்கேப்

எஸ்கேப்

நம்பர் நாயகிக்கும் கைவசம் சில படங்கள் இருப்பதால், தேவையில்லாமல், நம்ம டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம் என நினைத்த அந்த சமத்து நடிகை, சத்தம் காட்டாமல், ரெளடி இயக்குநருக்கு டாட்டா காட்டி விட்டு மாமியார் ஊருக்கு பறந்து விட்டாராம். எப்போ படம் தொடங்கி, ரெண்டாவது ஹீரோயின் புக் பண்ணி அந்த ரெளடி இயக்குநர் படம் பண்ணப் போகிறாரோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X