கட்டிக் காப்பாற்றும் ரகசியம்.. விரைவிலே பலூன் வெளியாகிவிடும்.. அதுக்குத்தான் அந்த ஓய்வு அறிவிப்பா?
Recommended Video
சென்னை: கோலிவுட், டோலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வரும் அந்த சமத்தான நடிகை, தற்போது பாலிவுட் பக்கமும் விசிட் அடித்து வருகிறார்.
திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், வாரிசை எதிர்பார்த்து மாமியார் வீடு, தினமும் பேச்சுக்களை நகர்த்தி வர, இவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
சீக்கிரமே பலூன் வெளியாகி விடும் என்பதால், தான் நடிப்புக்கு ஓய்வு எடுக்கப் போவதாக அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

மார்க்கெட் காலியாகி விடும்
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள், பெரும்பாலும், திருமணத்தை தவிர்த்து வருவது இந்த காரணத்திற்காகத்தான். திருமணம் செய்து விட்டால், அடுத்து வாரிசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். குழந்தை பெற்று விட்டால், பழைய அழகு எல்லாம் மறைந்து விடும், மார்க்கெட் காலியாகி விடும் என்பதலேயே நடிகைகள் திருமணத்துக்கு நோ சொல்லி வருகின்றனர்.

எவ்ளோ நாள் காதலிக்கிறது
ஒரு கட்டத்தில் சக நடிகர்கள் மீதோ, அல்லது பிரபலங்கள் மீதோ காதலில் விழுந்து விட்டால், சில ஆண்டுகள், திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு காதலர்களாக சுற்றலாம். ஆனால், அதுவும் எவ்ளோ நாள் தான் காதலிக்கிறது என்ற கட்டாயம் வந்த நிலையில், அந்த சமத்தான நடிகையும் திருமணத்திற்கு சம்மதித்தார்.

ரகசியமா
தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து குவிவதால், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை இப்போதைக்கு ரகசியமக கட்டிக் காத்து அந்த நடிகை வருகிறார் என்றும், விரைவில் பலூன் வெளியாகி ரகசியங்கள் வெளியாகி விடும் என்ற வதந்திகளும், சினிமா வட்டாரங்களில் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்திருக்கிறது.

அந்த படம் தான் கடைசி
காதலர் தினத்தை முன்னிட்டு பெரிய எதிர்பார்ப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதால், நம்பர் நடிகை மற்றும் ரவுடி நடிகருடன் இணைந்து நடிக்க உள்ள படம் தான் கடைசி என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அந்த படத்திலும், அவருக்கான போர்ஷன் கம்மி தான் என்பதால், தான் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

சீக்கிரமே நல்ல செய்தி
சமத்தான அந்த நடிகை, தனது ரசிகர்களுக்கு சீக்கிரமே, நல்ல செய்தி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு ஆண்டுகள் ஓய்வுக்குப் பிறகு, தனது முதல் குழந்தையான சினிமாவை கவனிக்க கம்பேக் ஆகும் பிளானிலும் அந்த பிரபல நடிகை உள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications