ஒத்தி போடப்பட்ட பருத்தி வீரன்!
போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி என மிரட்டல் படங்களுடன் மோத விரும்பாமல்,பருத்தி வீரன் பட ரிலீஸை ஒத்திவைத்து விட்டார் இயக்குனர் அமீர்.
பொங்கலுக்கு 8 படங்கள் வருவதாக இருந்தது. ஆனால் ரிலீஸ் ஆனதோ விஜய்யின்போக்கிரி, அஜீத்தின் ஆழ்வார், விஷாலின் தாமிரபரணி என சில படங்களே.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பருத்தி வீரன் வரவில்லை. என்ன காரணம் என்றுவிசாரித்துப் பார்த்தால், போக்கிரி, ஆழ்வார் படங்களுடன் போட்டி போடவிரும்பாமல்தான் படத்தைத் தள்ளி வைத்து விட்டார் அமீர் என்கிறார்கள்கோடம்பாக்கத்தில்.
அதுமட்டுமில்லாமல், தம்பியின் (சூர்யா தம்பி கார்த்திதான் படத்தின் ஹீரோ) முதல்படம் என்பதால் மிகப் பெரிய வெற்றியைப் பற்றால்தான் நல்ல தொடக்கமாகஇருக்கும், இப்போது விஜய், அஜீத் படங்கள் மீதுதான் ரசிகர்கள் கவனம் இப்போதுஇருக்கும், எனவே மெதுவாக வெளியிடுங்கள் என சூர்யாவும் கேட்டுக்கொண்டாராம்.
இதுவும் பருத்தி வீரன் தள்ளிப் போக ஒரு முக்கியக் காரணமாம்.
அதே நேரத்தில் படத்தில் சில காட்சிகள் இன்னும் முடிவு பெறாமல் உள்ளதாம்.அதனால்தான் படம் வரவில்லை என்றும் இன்னொரு தரப்பு கிசுகிசுக்கிறது.
படம் எப்போது வெளிவரும் என்பதிலும் தெளிவான தகவல் இல்லை.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வா வீரா!


Click it and Unblock the Notifications