»   »  ஆசின் வழியில் பிரியாமணி!

ஆசின் வழியில் பிரியாமணி!

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் பிச்சிக்கிட்டு ஓடியதால் பிரியா மணியிடம் பந்தா வந்து ஒட்டிக் கொண்டு விட்டதாம். பல கொள்கை முடிவுகளை வகுத்துக் கொண்டு தயாரிப்பாளர்களை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளாராம்.

கண்களால் கைது செய் முதல் அது ஒரு கனாக்காலம் வரை சில படங்களில் நடித்தும் பிரியாவை சீந்துவார் யாரும் இல்லை. இதனால் விசனமாகிக் கிடந்தார் பிரியா. ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார் பிரியா.

அத்து விட்டதே ஆத்தா என்று தமிழ் சினிமா குறித்து பிரியா புலம்பிக் கொண்டிருந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது பருத்தி வீரன். படம் வெளியாகி பட்டையைக் கிளப்பியதால் பிரியா மணிக்கும் பிழைப்பு புத்துணர்ச்சி பெற்று விட்டது.

பருத்தி வீரனின் ஓட்டத்தைப் பார்த்து சிலர் பொட்டிகளுடன் புக் பண்ண பிரியாவைத் தேட ஓட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இப்போது நான் தெலுங்கில் பிசி (இரண்டு படம் கையில் இருக்கிறதாம்). அதை முடித்து விட்டுத்தான் தமிழுக்கு வருவேன் என்று தெனாவட்டாக கூறி விட்டாராம் பிரியா.

அத்தோடு நில்லாமல், இனிமேல் நான் எல்லா ஹீரோவுடனும் ஜோடி போட மாட்டேன். குறிப்பாக புது நாயகர்களுடன் நடிக்கவே மாட்டேன். அதேபோல மூத்த நடிகர்களுடனும் நடிக்க மாட்டேன்.

விஜய், அஜீத், விக்ரம் மாதிரியான பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன். அப்படிப்பட்டவர்களின் படமாக இருந்தால் வாருங்கள். இல்லாவிட்டால் அப்படியே போய் விடுங்கள் என்று கூறுகிறாராம்.

பிரியா மணியின் இந்த கொள்கை முடிவால், தயாரிப்பாளர்கள் கடுப்பாகி இருக்கிறார்களாம். ஒடியது ஒரு படம், அதற்குள் ஓராயிரம் கண்டினஷனா என்று புலம்புகிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil