அந்த ஹீரோயினுக்கும் காத்ல் கணவருக்கும் பிரச்னையாமே? சீக்கிரம் வெளிவருமாம் சீரியசான பஞ்சாயத்து!

By

சென்னை: அந்த ஹீரோயினுக்கும் காதல் கணவருக்குமான சீரியஸ் பஞ்சாயத்து சீக்கிரம் வெளிவரும் என்கிறார்கள் கோலிவுட்டில்.

தெலுங்கு சேனல் ஒன்றில் வண்ணங்கள் பற்றி நிகழ்ச்சிப் பண்ணிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்குத் தெத்துப்பல் அழகு.

இதையடுத்து அங்கு ஹீரோயின் ஆக்கினார்கள் அவரை. அப்படியே தமிழுக்கும் அழைத்துவந்தார்கள்.

பக்கத்துவீட்டு

பக்கத்துவீட்டு

நடித்த முதல்படமே சூப்பர் ஹிட். நடிகைக்கும் பக்கத்துவீட்டுப் பெண் என்ற இமேஜ் கிடைக்க, ஏராளமான வாய்ப்புகள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்தார். சில படங்கள் ஹிட், சில படங்கள் ஃபிளாப். இருந்தாலும் வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. பிறகு அப்படியே மலையாள சினிமாவுக்கும் போனார். அங்குள்ள ரசிகர்கள் அவரை அள்ளிக் கொண்டார்கள்.

திருமணம்

திருமணம்

தமிழ், தெலுங்கில் கிடைத்ததை விட, மலையாளத்தில் வரவேற்பு அதிகமாகக் கிடைக்க, நடிகைக்கும் ஹேப்பி. ஜாலியாகப் போய்க் கொண்டிருந்த இந்த வாழ்க்கையில் வந்து விழுந்தது, காதல். காதலர், கடவுளின் தேசத்தைச் சேர்ந்தவர். சில வருட காதல் பிறகு இருவீட்டு சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

சில வருடங்கள்

சில வருடங்கள்

காதலித்து திருமணம் செய்யும் நடிகைகளின் திருமண வாழ்க்கை தொடர்ந்து நீடித்தால் அது அதிர்ஷ்டம்தான். பெரும்பாலான நடிகைகளின் திருமணங்கள் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இதற்கு பல நடிகைகளின் திருமணங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். பிறகு அவர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வார்கள். இது வழக்கமானதுதான்.

மறுக்கிறார்களாம்

மறுக்கிறார்களாம்

இந்நிலையில், தெத்துப்பல் நடிகையின் காதல் கல்யாணத்திலும் இப்போது சிக்கல் என்கிறார்கள். திருமணமாகி இரண்டு வருடம்தான் ஆகி இருக்கிறது. அதற்குள் இருவருக்கும் கருத்துவேறுபாடு என்கிறார்கள். நடிகைக்கு நடிக்க வாய்ப்பு வருகிறது. அவருக்கு ஓகேதான். ஆனால், காதல் கணவர் வீட்டில் மறுக்கிறார்களாம். இதுதான் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி என்கிறார்கள். விரைவில் உண்மை வெளிவருமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X