காப்பி இயக்குநரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்!

Recommended Video

காப்பி இயக்குநரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்!-வீடியோ

திருடனுக்கு தேள் கொட்டியது போல... என்று சொல்வாரகள். ஆனால் ஒரு கதை திருட்டால் அப்பாவி தயாரிப்பாளர் ஒருவர் தேள் கொட்டியது போல தவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒல்லி நடிகர் தேசிய விருது வாங்கிய படத்தின் தயாரிப்பாளர் அவர். ஒல்லி நடிகருக்கும் மிகவும் நெருக்கமானவரும் கூட. அவர் மூன்று முகம் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். நிச்சயம் பெரிய ஹீரோ கால்ஷீட் கிடைக்கும். நிச்சய வெற்றி என்பதால் படம் பிசினஸும் ஆகிவிடும் என்று பல கணக்கு போட்டு சுமார் 50 லட்சம் கொடுத்து ரீமேக் மற்றும் டைட்டில் உரிமையை வாங்கி வைத்திருந்தாராம். ஒல்லி நடிகரைக் கூட நடிக்க வைக்கலாம் என்று மனதில் நினைத்திருந்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்த இளம் காப்பி இயக்குநர் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்.

Producer affects by a young director

சமீபத்தில் ரிலீஸான அவரது படம் அப்படியே மூன்று முகம் படத்தின் காப்பிதான். எனவே இந்த தயாரிப்பாளர் ரீமேக் உரிமை வாங்கியது வீணாகி விட்டது. எனக்கு நஷ்ட ஈடு வாங்கிக் கொடுங்க... என்று சங்கங்களில் முறையிட்டிருக்கிறார். அந்த இயக்குநர் காப்பி என்று ஒப்புக்கொள்ளாத நிலையில் இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைகின்றன சங்கங்கள்.

டெய்ல் பீஸ் - சத்ரியன் படத்தின் ரீமேக்கை வாங்கியவர்களுக்கும் இதே கதிதான் உருவானது.
இயக்குநர் தம்பி நீங்க விளையாடுங்க... அடுத்து அண்ணாமலையா? தளபதியா? அக்னி நட்சத்திரமா...?

More from Filmibeat

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X