பிரம்மாண்டம் மகளின் படம் வெளியே வராதா?.. டைரக்டரை பாடாய்ப்படுத்திய தயாரிப்பாளர்.. மொத்தமும் போச்சு!
சென்னை: சினிமாவில் பெரிதாக சாதிக்கப் போகிறேன் என களமிறங்கிய பிரம்மாண்டத்தின் மகளுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அதற்கு மேல் அவருக்கு சினிமாவில் பிரைட் ஃபியூச்சர் இல்லாமல் செம பல்பு வாங்கி வருகிறார்.
முன்னணி நடிகர்களின் படங்களை அப்பாவின் இன்ஃப்ளூயன்ஸ் வைத்து ஆரம்பத்தில் அள்ளிய நடிகைக்கு ஒரு சில படங்களுக்குப் பிறகு பெரிதாக முன்னணி நடிகர்களின் படங்கள் கிடைக்காமல் போய் விட்டது.

யங் ஹீரோக்களை நம்பி களமிறங்கிய நடிகைக்கு படங்களே கிடைக்காமலும், பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த படங்கள் ரிலீஸ் ஆகாமலும் போன நிலையில், ரொம்பவே கடுப்பில் உள்ளாராம். அதிலும், அவர் நடித்து பாடல்கள் எல்லாம் ஹிட்டடித்த ஒரு படம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளரின் கெடுபிடியால் ரிலீஸ் ஆகாமல் போய் விட்டது என திடுக்கிட வைக்கின்றனர்.
கிளைமேக்ஸ் சரியில்லை
டைரக்டர் பிரம்மாண்டம் மகளை வைத்து எடுத்த படத்தில் கிளைமேக்ஸ் சரியில்லை என தயாரிப்பாளர் டார்ச்சர் கொடுக்க மீண்டும் சிரமப்பட்டு புதிய கிளைமேக்ஸை இயக்குநர் மாற்றி அமைத்தாராம். ஆனால், அந்த வெர்ஷனும் தயாரிப்பாளரை திருப்திப்படுத்தவில்லையாம். தொடர்ந்து இதே தொடர்கதையாக மாறிய நிலையில், ஒரு கட்டத்தில் டைரக்டர் கடுப்பாகி படத்தை விட்டே வெளியேறிய நிலையில் தான் படம் இன்னமும் வெளியாக முடியாமல் தவித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அப்செட்டில் வாரிசு நடிகை
பிரம்மாண்டத்தின் வாரிசு சினிமாவில் பெரிய ஹீரோயினாக மாறிவிடலாம் என ஆசைப்பட்டு இண்டஸ்ட்ரிக்குள் வந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆவதும், படமே வெளியாகாமல் போவதுமாக அபசகுணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வாரிசு நடிகை ரொம்பவே அப்செட்டாக உள்ளாராம்.
மொத்தமும் போச்சு
படத்தின் டைட்டில் முதல் பாடல்கள் வரை நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தயாரிப்பாளர் தனது ஈகோவையும் டைரக்டர் தயாரிப்பாளருக்கு புரிய வைக்கவும் முயற்சி செய்திருந்தாலே இந்த படம் வெளியாகி எல்லாருக்கும் லாபத்தை கொடுத்திருக்கும் என்கின்றனர். ஆனால், ஒரு சிலரது சுயநலத்தால் பெரும் நஷ்டத்தை தயாரிப்பாளர் சந்தித்து வருவதாகவும் ஆரம்பத்திலேயே இயக்குநருடன் இணக்கமாக சென்றிருந்தால் இந்த ஆப்பு வந்திருக்காது என்கின்றனர். தயாரிப்பாளரே படத்தை ரெடி பண்ணி ரிலீஸ் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











