100 கோடி செலவு.. சர்ச்சை நடிகையால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர் !
சென்னை : பாலிவுட் நடிகையை நம்பி 100 கோடி செலவு செய்த தயாரிப்பாளர் ஏமாற்றமடைந்து தற்போது தெருவுக்கு வந்துள்ளார்.
பாலிவுட்டில் சர்ச்சை நடிகை என பெயர் எடுத்த அந்த நடிகை, எந்த பிரச்சனையானாலும் மூக்கை நுழைத்து அதில் போய் தானாக சிக்கிக் கொள்வார். இதனால், பாலிவுட்டில் இந்த அம்மணிக்கு சர்ச்சை நாயகி என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இந்த அம்மணி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதாலேயே தயாரிப்பாளர்கள் இவரை ஒப்பந்தம் செய்ய பயப்படுகின்றனர்.

சர்ச்சை நாயகி
பாலிவுட்டில் வாரிசு கலாச்சாரம் மேலோங்கி உள்ள இந்த காலகட்டத்தில், தனி ஆளாக போராடி பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த சர்ச்சை நாயகி. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். திறமையான நடிகையாக இருந்த போது வாய் சரி இல்லாததால் எதையாவது பேசி வம்பில் மாட்டிக்கொள்வார்.

படவாய்ப்பு இல்லை
தமிழில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. ஆனால், அதன் பிறகு பட வாய்ப்பு வரவில்லை. இதையடுத்து, நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் பான் இந்திய திரைப்படமாக வெளியானது . ஆனால், அந்த படமும் தோல்விப்படமாக அமைந்ததால், கோலிவுட் நமக்கு செட்ஆகாது என்ற முடிவுக்கு வந்த அம்மணி பாலிவுட்டுக்கே ஓட்டம் எடுத்தார்.

கஷ்டம்
இதையடுத்து, அந்த தேசிய நடிகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி படு மோசமான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை நம்பி தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார். ஆனால், படம் வெளியாகி வெறும் 4 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.

தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்
இதனால், தயாரிப்பாளர் நஷ்டத்தை ஈடுகட்ட என்ன செய்வது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், படத் தோல்வியால் தெருவுக்கு வந்திருக்கும் தயாரிப்பாளருக்கு ஆறுதல் சொல்லாமல், அம்மணி அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டாராம். இதனால், சர்ச்சை நடிகையை கலாய்த்து பலவிதமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











