Don't Miss!
- News
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் சேலையில் மயில், தாமரை! பரிசாக தந்தது யார் தெரியுமா? சிறப்புகள் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சொகுசு ஹோட்டலே கதியென கிடக்கும் தயாரிப்பாளர்.. இளம் நடிகைகள் தான் டார்கெட்டாம்.. கிளம்பிய பூகம்பம்!
சென்னை: பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தொடர்ந்து சொகுசு ஹோட்டல் ஒன்றிலேயே டேரா போட்டு தங்கி வருகிறார் என்கிற பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடும்பத்தையும் சொந்த வீட்டையும் விட்டு விட்டு இந்த வயதில் அவர் ஹோட்டலிலேயே ரூம் எடுத்து தனியாக தங்க காரணம் என்ன என்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் பூகம்பமாக கிளம்பி வருகின்றன.
சமீபத்தில் நடிகர் ஒருவருக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் நடக்க காரணமே அவரை பற்றிய விஷயங்களை அம்பலப்படுத்திவிடுவார் என நினைத்து தான் என்கின்றனர்.
புதிதாக ஹோட்டல் திறக்கும் கதிர்.. அண்ணியிடம் ஆசிர்வாதம்.. பாண்டியன் ஸ்டோர்சில் அதிரடி!

சர்ச்சை பேச்சு
சினிமா படங்களை எடுத்து தயாரிப்பாளராக பலர் வலம் வரும் நிலையில், ஒரு சில படங்களை மட்டுமே எடுத்து விட்டு வெறும் சர்ச்சையாக சினிமா விழாக்களில் மட்டுமே பேசி தயாரிப்பாளர் என தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் அந்த தயாரிப்பாளர் சினிமா விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூட காசு வாங்கி வருகிறாராம்.

நெகட்டிவ் பப்ளிசிட்டி
அந்த தயாரிப்பாளர் வந்து ஏதாவது பேசினாலோ, யாரையாவது திட்டினாலோ நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது தங்கள் படங்களுக்கு கிடைக்கிறதே என பல உப்மா கம்பெனி நிறுவனங்கள் அந்த தயாரிப்பாளரை சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பேச அழைத்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகருடன் மோதல்
சமீபத்தில் அந்த நடிகருடன் நிகழ்ச்சி மேடையிலேயே அப்படியொரு மோதல் நடத்த காரணமே அந்த தயாரிப்பாளர் பற்றிய விஷயங்களையும் அவர் கசியவிட்டது தான் என்கின்றனர். இருவருக்கும் அடிக்கடி முட்டிக் கொள்வதால் அந்த தயாரிப்பாளர் பற்றிய பல லீலைகளை அம்பலப்படுத்தும் நோக்கில் அந்த பிரபலமும் களம் இறங்கி உள்ளாராம்.

ஹோட்டலே கதி
சொந்த வீட்டையும் குடும்பத்தையும் விட்டு விட்டு பல நாட்களாக ஹோட்டலே கதியென இந்த வயதிலும் அந்த தயாரிப்பாளர் இருந்து வருகிறார் என பேச்சுக்கள் கோடம்பாக்கம் முழுவதும் பரவி வருகிறது. வீட்டில் நிம்மதியில்லாமல் ஹோட்டலில் தங்குகிறேன் என்று சொல்வதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சு என்றும் அங்கே நடக்கும் விவகாரமே வேற என பெரிய பூகம்பமே கிளம்பி உள்ளது.

இளம் நடிகைகள் தான் டார்கெட்
சினிமா வாய்ப்புத் தேடி அலையும் பெண்கள் மற்றும் அறிமுக நடிகைகளுக்கு தான் ஒரு பெரிய தயாரிப்பாளர் என்றும் பல பெரிய இயக்குநர்களையும் நடிகர்களையும் தெரியும் என்று சொல்லியே பலருடன் உல்லாசமாக இருந்து வருகிறாராம். அதற்குத்தான் ஹோட்டலில் தனியாக வசித்து வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எச்சரிக்கை
இளம் நடிகைகள் மற்றும் சினிமா கனவை நோக்கி வரும் பெண்கள் அந்த தயாரிப்பாளரிடம் இருந்து கொஞ்சம் உஷாரா இருங்க என அந்த நடிகர் மறைமுகமாக எச்சரிக்கை கொடுத்து வருவதால் தான் இருவருக்கும் பகிரங்கமாக முட்டிக் கொண்டது என்றும் கூறுகின்றனர். இதில், எது உண்மை என்பது தெரியவில்லையே, அவர் அப்படிப்பட்டவரா? என கோடம்பாக்கத்தினரே ஷாக் ஆகி உள்ளார்களாம்.