தமிழ் தயாரிப்பாளர்கள் தலையில் என்ன எழுதி இருக்கு? நடிகர் மீது உச்சகட்ட கோபம்.. நடிகையும் காரணமா?

By Staff

சென்னை: சென்னை: தமிழ் சினிமாவில் பட்ஜெட் எகிறிக்கொண்டே போவதும், அதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்திப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இப்படி இருக்கையில், சமீபத்தில் கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், தான் எடுத்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களால் உச்சகட்ட அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "நம்ம தலையில என்ன எழுதி இருக்கான்னே தெரியலையே..." என்று தயாரிப்பாளர் தரப்பு புலம்பும் அளவுக்கு அங்கு நிலைமை சீரியஸாக இருக்கிறதாம்.

அந்தப் பெரிய பட்ஜெட் படத்தின் ஷூட்டிங்கிற்காக அண்மையில் படக்குழுவினர் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றிருந்தனர். அங்கு ஒரு முக்கியமான சண்டைக்காட்சி மற்றும் பாடல் காட்சியைப் படமாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகப் பல கோடிகள் செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, உள்ளூர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களும் புக் செய்யப்பட்டிருந்தனர்.

Producer Furious Over Star s Demands Actress Also Behind the Trouble

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் செய்த பிடிவாதம்: ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அந்தப் பிரபல நடிகர், திடீரென அந்த லொகேஷன் தனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். "இந்த இடம் கதையின் சூழலுக்குச் சரியாக வராது, அதனால் வேறு இடத்திற்கு மாற்றுங்கள்" என்று அவர் ஒற்றைக்காலில் நின்றதாகக் கூறப்படுகிறது. இயக்குநரும் தயாரிப்பாளரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நடிகர் கேட்காததால், பல நாட்கள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, தயாரிப்பாளருக்குப் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நடிகையும் காரணமா?: இந்த விவகாரத்தில், நடிகரின் இந்தத் திடீர் பிடிவாதத்திற்குப் பின்னால் அந்தப் படத்தில் நடிக்கும் முன்னணி நடிகை ஒருவரும் இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

படப்பிடிப்பு நடந்த அந்த லொகேஷனில் தங்குவதற்குக் கொடுக்கப்பட்ட ஹோட்டல் வசதிகள் அந்த நடிகைக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை அவர் நடிகரிடம் வெளிப்படுத்த, அதன் பின்னரே நடிகர் லொகேஷனை மாற்றச் சொல்லி ஷூட்டிங்கை நிறுத்தினார் என்ற பேச்சும் பலமாக எழுந்துள்ளது.

கோபம்: ஏற்கனவே தமிழ் சினிமாவில் வட்டி, தியேட்டர் ரிலீஸ் சிக்கல் எனப் தயாரிப்பாளர்கள் பல நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், நட்சத்திரங்களின் இதுபோன்ற பிடிவாதங்களால் தயாரிப்பாளர் தரப்பு நடிகர் மற்றும் நடிகை மீது கடுமையான கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. படம் முடிந்து ரிலீஸ் ஆவதற்குள் இன்னும் என்னென்ன பஞ்சாயத்துகள் வருமோ என்ற கவலை இப்போதே கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X