அடுத்த படமும் கிளுகிளுப்பா இருக்கணும்: கில்மா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
சென்னை: கில்மா படம் எடுத்த இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளாராம்.
பெயரில் மகிழ்ச்சியை வைத்திருக்கும் இயக்குனர் எடுத்த மேட்டர் காமெடி படம் ஹிட்டானது. அதை சிங்கத்தின் உறவுக்கார தயாரிப்பாளர் தயாரித்தார். அந்த படத்தை அடுத்து அந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் மீண்டும் மேட்டர் காமெடி படத்தை எடுத்தனர்.
முதல் படத்தை போன்றே இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது. பலரும் படத்தை கழுவிக் கழுவி ஊத்தியபோதும் வசூல் குவிந்துவிட்டது.
இதை பார்த்து குஷியான தயாரிப்பாளர் இயக்குனருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளாராம். முதல் கில்மா படம் வெற்றி அடைந்தபோது ஆடி கார் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் ஒரு கில்மா படத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குனருக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளாராம் தயாரிப்பாளர்.


Click it and Unblock the Notifications











