மண்டையை கழுவிய மாஸ் நடிகர்.. உச்சகட்ட பயத்தில் தயாரிப்பாளர்.. மாட்டிக்கிட்டோமான்னு ஒரே புலம்பல்!

By Staff

சென்னை: மாஸ் நடிகருக்கு லோக்கல் தயாரிப்பாளர்கள் எல்லாம் கை விரித்த நிலையில், புதிதாக பக்கத்து ஸ்டேட்டில் இருந்து ஒரு வெயிட்டான பார்ட்டியை பிரைன் வாஷ் பண்ணி, கண்டிப்பாக நம்ம படம் கல்லா கட்டும் என நம்ப வைத்து பெரிய சம்பளத்தை ஆட்டையப் போட்டுவிட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஆனால், கடைசி நேரத்தில் தொடர்ந்து மாஸ் நடிகருக்கு எதிராக ஏகப்பட்ட கத்திகள் பாயத் தொடங்கியது தெரிய வந்ததும், அதெல்லாம் நம் தலையை பதம் பார்த்து விடுமோ என்கிற அச்சத்தில் தயாரிப்பாளர் உள்ளார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

Producer had a big fear due to lots of obstacles for Mass Actor movie

இந்த வருடம் உச்ச நடிகரின் படமே ரசிகர்களை கவராமல் பாக்ஸ் ஆபீஸில் மண்டியிட்ட நிலையில், அதே நிலைமை மாஸ் நடிகர் படத்துக்கும் நடந்துவிட்டால் பெரிய சிக்கல் ஏற்பட்டு விடும் என விநியோகஸ்தர்களும் ரொம்பவே கலக்கத்தில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.

மண்டையை கழுவிய மாஸ் நடிகர்: தனது புதிய பயணத்துக்கு ஏகப்பட்ட பணம் தேவைப்படுவதால், பெரிய தொகையை சம்பளமாக பெற்று பக்கத்து ஸ்டேட்டில் இருந்து ஒரு பலியாட்டை மாஸ் நடிகர் மண்டையை கழுவி பிடித்து வந்து விட்டார் என்றும் தற்போது அந்த ஆடு ரொம்பவே உச்சகட்ட பயத்தில் தலையை ஆட்டலாமா? வேண்டாமா? என குழம்பிப் போய் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

மாஸ் நடிகருக்கு சிக்கல்: தொடர்ந்து மாஸ் நடிகருக்கு எதிராக ஏகப்பட்ட ஆப்புகளை எதிர் தரப்பு பல்வேறு வகையாக வைத்து வரும் நிலையில், வசமாக நாம வந்து மாட்டிக்கிட்டோம் என தயாரிப்பாளர் சமீபத்தில், நெருங்கிய வட்டாரத்தில் பேசும் போது புலம்பித் தீர்த்துள்ளார் என திடுக்கிட வைக்கின்றனர். தயாரிப்பாளரை தாண்டி விநியோகஸ்தர்களும் அதே பஜனையை தான் பாடி புலம்பி வருகிறார்களாம்.

நான் பார்த்துக்கிறேன்: எப்படி பயமுறுத்தினாலும், டார்ச்சர் செய்தாலும், எதையுமே கண்டுக்காதீங்க, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். அதுக்குத்தானே முன்கூட்டியே ஒரு பெரிய ஏற்பாட்டையும் அதன் மூலம் வருமானத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன் என தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் மாஸ் நடிகரே தேற்றியுள்ளார் என்கின்றனர். இருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் பஞ்சர் ஆனால், மொத்தமும் ஸ்பாயில் ஆகிவிடும் என சற்றே பயத்துடனே இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X