அப்பா பெயர் அடிபட்டதும் பறந்த போன்.. மழுப்பலாக மன்னிப்பு கேட்க அதுதான் காரணமா?
சென்னை: பிரபல நடிகர்களின் தந்தை பெயரை இந்த பிரச்சனையில் இழுத்து விட்ட நிலையில் தான் அந்த தயாரிப்பாளரை மன்னிப்பு கேட்க சொல்லி போன் கால் பறந்துள்ளதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன. இதுவரை திமிராக அந்த தயாரிப்பாளர் பேசி வந்த நிலையில், கடமைக்கு ஒரு போஸ்ட் போடக் காரணமே அதுதான் என்கின்றனர்.
அந்த இயக்குநர் மீது பல ஆண்டுகளாக கடுப்பில் பிரதர் நடிகர் இருந்து வரும் நிலையில் அவருக்கு சாதகமாகவே தயாரிப்பாளர் செயல்பட்டு வந்தார் என்றும் கூறுகின்றனர்.

நடிகரை பெரியளவில் அந்த இயக்குநர் காயப்படுத்தியதை வெளியே சொல்ல முடியாமல் தான் அவரை ஒரே அடியாக விட்டு ஒதுங்கி விட்டார் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
பிரதர் பண்ணும் வேலை: பிரபல நடிகரின் பிரதர் தான் இத்தனை பிரச்சனைக்கு காரணம் என்றும் கடைசி வரை என்ன ஆனாலும் பார்த்துக்கலாம், நீ பேசுறத பேசு என பின்னாடி இருந்து இயக்குவதே அந்த நடிகர் தான் எனக் கூறுகின்றனர். அதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் கம்முன்னு அவர் இருந்து வருவதாகவும் அவருக்கும் இயக்குநருக்கும் பழைய பகை ஒன்று இருப்பதாக புதிய கதைகளும் முளைக்க ஆரம்பித்துள்ளன.
அப்பா பெயர் அடிபட்டதும்: மற்ற பிரபலங்கள் நியாத்தை பேசும் போதெல்லாம் பதிலடி கொடுத்து வந்த தயாரிப்பாளர் திடீரென இப்படி அந்தர் பல்டி அடிக்க காரணமே அந்த நடிகர்களின் அப்பாவை அந்த இயக்குநர் உள்ளே இழுத்து விட்டது தான் காரணம் என்கின்றனர்.
போன் போட்ட நடிகர்: இந்த விவகாரத்தில் நானெல்லாம் உள்ளே வந்து பேச மாட்டேன். நீ ஆரம்பித்து வைத்ததை நீயே முடித்து வை, இனிமேல் தேவையில்லாமல் எங்கள் பெயர் அடிபடக் கூடாது என அண்ணன் நடிகர் போன் போட்டு ஆர்டர் போட்ட நிலையில், தான் பெயருக்காக ஒரு மன்னிப்பு போஸ்ட்டை அந்த தயாரிப்பாளர் போட்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.
பிரதருக்கு பிடிக்கவில்லை: ஆனால், தங்கள் தரப்புக்காக தொடர்ந்து பேசி வந்த சொந்தக்காரரரை விட்டுக் கொடுக்க பிரதருக்கு கடைசி வரை விருப்பமில்லை என்றும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன. ஒரு வழியாக அந்த பிரச்சனை முடிந்தால் போதும், எதுக்கு தேவையில்லாமல் கிளறணும் விட்ருங்க என சம்பந்தப்பட்ட இயக்குநரே சமாதான முடிவுக்கு சென்று இருப்பதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











