»   »  சம்பளத்தை சொல்ல மறுத்ததால் ரீமேக் படத்தில் இருந்து தூக்கப்பட்ட ஸ்லிம் நடிகை?

சம்பளத்தை சொல்ல மறுத்ததால் ரீமேக் படத்தில் இருந்து தூக்கப்பட்ட ஸ்லிம் நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹிந்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அந்த படத்தில் நடித்த நடிகைக்கும் தேசிய விருது வாங்கிக்கொடுத்த படத்தின் ரீமேக்கை மம்பட்டியான் நடிகர் வாங்கி வைத்திருக்கிறார். அந்தப் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகையாக பார்த்து கடைசியில் ஸ்லிம் நடிகை ஒப்பந்தமானார். இப்போது அந்த நடிகையும் விலகி விட்டதாகவும் படமே ட்ராப் ஆகிவிட்டதாகவும் செய்தி வந்திருக்கிறது. நடிகையும் அதனை உறுதி செய்திருக்கிறார்.

Producer remove Slim actress from mega remake

நடிகையின் சம்பளம் படியாததால்தான் படம் ட்ராப் ஆனது என்கிறார்கள். நடிகை நடித்திருக்கும் பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தின் சம்பளம் பேசும்போது அந்த பிரம்மாண்ட படம் ரிலீஸுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம் நடிகை.

சம்பளம் இவ்வளவு என்று பேசினால் தானே படத்தைத் தொடங்க முடியும். நடிகை இழுப்பது ஒரேயடியாக ஏற்றுவதற்காகதான் என்பதை அறிந்த மம்பட்டியான் படத்தையே ட்ராப் செய்யப் போவதாகக் கூறிவிட்டாராம்.

பெரும் விலை கொடுத்து ரைட்ஸை வாங்கியிருப்பதால், ட்ராப் பண்ண மாட்டார் என்று படக்குழு நம்புகிறது.

English summary
Mambattiyan producer has decided to drop his idea of remaking Hindi blockbuster due to slim actress salary issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil