தயாரிப்பாளர் மகனுடன் ஜாலியாக சுற்றும் நடிகை மகள்.. தனியா ட்ரிப்பெல்லாம் போக ஆரம்பிச்சுட்டாங்களாம்!

By Staff

சென்னை: சினிமா உலகத்தைப் பொறுத்தவரை வாரிசுகளின் ஆதிக்கம் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒன்றுதான். அப்பன் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும் கதையாக, தயாரிப்பாளர்களின் வாரிசுகளும், நடிகர், நடிகைகளின் வாரிசுகளும் சினிமாவிற்குள் நுழைவது சாதாரணமாகிவிட்டது. ஆனால், சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்னரே, தங்கள் வாரிசுகள் செய்யும் அலப்பறைகளால் கோலிவுட் வட்டாரமே வாயடைத்துப் போய் கிடப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

இப்படி இருக்கையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் மகனும், ஒருகாலத்தில் தமிழ் திரையுலகை ஆட்டிப்படைத்த பிரபல நடிகை ஒருவரின் மகளும் அடிக்கும் லூட்டிகள் தான் இப்போது கோடம்பாக்கத்தின் தற்போதைய கிசுகிசு.

நட்பை தாண்டிய உறவு.. பார்ட்டி டூ ட்ரிப்!ஆரம்பத்தில் பொதுவான சினிமா பார்ட்டிகள், நண்பர்களின் சந்திப்புகள் என சாதாரண நட்புடனே வலம் வந்த இந்த வாரிசு ஜோடி, நாளடைவில் தங்களுக்குள் இருக்கும் 'கெமிஸ்ட்ரி' ஒர்க்கவுட் ஆனதால், தற்போது நட்பைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை வட்டாரத்தில் இருக்கும் முக்கிய பப்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் இவர்களைத் ஜோடியாகப் பார்ப்பது வழக்கமாகிவிட்ட நிலையில், தற்போது இந்த ஜோடி யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தனியாக வெளி மாநிலங்களுக்கு லாங் ட்ரிப் அடிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.

Producer s Son and Actress Daughter Spark Dating Rumours With Secret Luxury Trips

கோலிவுட் வட்டாரப் பேச்சு: "சமீபத்தில் கூட ஒரு பிரபலம் இல்லாத மலைப்பிரதேசத்திற்கு, வீட்டில் 'பிரண்ட்ஸ் கூட போறோம்' என்று பொய் சொல்லிவிட்டு, இருவரும் மட்டும் தனியாகச் சென்று சில நாட்கள் ஜாலியாக இருந்து விட்டு திரும்பியுள்ளனர்."

கண்டு கொள்ளாத நடிகை.. கவலையில் தயாரிப்பாளர்: வாரிசுகளின் இந்த ரகசியப் பயணம் மற்றும் காதல் லீலைகள் தற்போது இருதரப்பு பெற்றோர்களின் காதுகளுக்கும் எட்டியுள்ளது. மகளின் இந்த நடவடிக்கையை கண்டு அந்த முன்னாள் நடிகை பெருசாகக் கண்டுகொள்ளவில்லையாம். "இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான், அவங்க லைஃப் அவங்க இஷ்டம்" என தாராளம் காட்டி வருகிறாராம் அந்த நடிகை.

ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலோ செம அப்செட்டாம். ஏற்கனவே சினிமாவில் ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளர்கள் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடன் தொல்லை, வட்டி எனப் பல பிரச்சனைகளுக்கு நடுவே, படத்தை எப்படியாவது பிசினஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்க, அவரது மகனோ நடிகை மகளுடன் ஊர் சுற்றிப் பணத்தை வாரி இறைப்பது தயாரிப்பாளருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு அரசியல்.. பலிகடாவாகும் தயாரிப்பாளர்: அதுமட்டுமில்லாமல், அந்த நடிகையின் மகள் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகத் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக, தயாரிப்பாளர் மகனைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டால், அவரது அப்பாவின் தயாரிப்பிலேயே பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோயினாக லான்ச் ஆகிவிடலாம் என்பது அந்த வாரிசு நடிகையின் கணக்காம். இதை உணராத தயாரிப்பாளர் மகன், காதலில் கண்மூடித்தனமாகத் திரிந்து வருகிறார் என்ற பேச்சுத்தான் அதிகம் அடிபடுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X