உனக்கு அவ்ளோதான் லிமிட்.. போனில் அந்த ஹீரோவை திட்டிய தயாரிப்பாளர்.. முதலுக்கே மோசம்னா எப்படி?
சென்னை: ஆரம்பத்தில் ராஜ மரியாதையுடன் ஹீரோக்களையும், இயக்குநர்களையும் தனது படங்களில் பணியாற்ற அழைத்து வரும் அந்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி விட்டு நல்லா ஓபி அடிக்கின்றனர் என்பதை தெரிந்துக் கொண்டால் அதன் பின்னர் டென்ஷன் ஆகிவிடுவாராம்.
படம் ஓடினால் கூட அமைதியாக இருந்து விடும் தயாரிப்பாளர் படம் தோல்வி அடைந்தால் நேரடியாகவே திட்டி விடும் பழக்கம் கொண்டவராக இண்டஸ்ட்ரியில் வலம் வருவதாக கூறுகின்றனர்.

பெரிய தொழிலதிபராக வலம் வரும் அவர் சினிமா மீதுள்ள ஆசையால் சமீப காலமாக பலருக்கும் படங்களை இயக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார். ஆனால், அந்த காமெடி ஹீரோ சமீபத்தில் தயாரிப்பாளருக்கே ஆப்பு அடிக்கும் விதமாக செய்த வேலையால் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறுகின்றனர்.
தவிக்கும் தயாரிப்பாளர்: சினிமாவில் முதலீடு செய்து கோடிக் கணக்கில் லாபத்தை பெறலாம் என்கிற நம்பிக்கையுடன் தான் பல தயாரிப்பாளர்கள் படங்களை தயாரித்து வருகின்றனர். ஆனால், வருடத்திற்கு 300 படங்கள் வெளியானால் அதில், லாபம் தரக்கூடிய படங்கள் 30க்கும் குறைவு தான் என்கிற நிலை உள்ளது. பெரிய வெற்றியை பெறும் படங்களாக 5 முதல் 10 படங்கள் தான் தப்பிக்கின்றன. இந்நிலையில், தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் அந்த பிரபல தொழிலதிபர் தயாரிப்பாளர் இயக்குநர்களுடனும் ஹீரோக்களுடனும் தொடர்ந்து சண்டை போட்டு வருவதாக கூறுகின்றனர்.
முதலுக்கே மோசம்: தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த காமெடி ஹீரோ போகிற போக்கில் தயாரிப்பாளரின் அடுத்த படத்துக்கு பெரிய வேட்டாக வைத்து விட்டாராம். எப்படியெல்லாம் ஃபிராடுத்தனம் பண்ணி அந்த படத்தை உருவாக்கினேன் என புட்டு புட்டு வைத்து முதலுக்கே மோசம் பண்ண நிலையில், அதை பார்த்த தயாரிப்பாளர் டென்ஷன் ஆகியுள்ளதாக கூறுகின்றனர்.
போன் போட்டு திட்டு: காமெடி ஹீரோவின் சமீபத்திய பேச்சால் காண்டான அந்த தயாரிப்பாளர் உனக்கு அவ்ளோதான் லிமிட் என போன் போட்டே திட்டிவிட்டதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து அந்த நடிகர் நடித்து வரும் படங்கள் தோல்வி அடைந்து வரும் நிலையில், சினிமாவிலேயே இருக்க முடியாத அளவுக்கு செய்து விடுவேன் என்றும் தயாரிப்பாளர் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











