For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தயாரிப்பு நிறுவனம் கொடுத்த டார்ச்சர்.. தாங்க முடியாமல் தவிக்கும் பாஸ் நடிகர்.. என்ன ஆகப் போகுதோ?

  By Staff
  |

  சென்னை: பல யுகங்களுக்கு பிறகு அந்த பாஸ் நடிகருக்கு ஒரே ஒரு வெற்றி கிடைத்த நிலையில், அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் நடித்து விட வேண்டும் என றெக்கை கட்டி பறந்தவரை மீண்டும் கூண்டுக்குள் போட்டு அடைக்க பார்க்கிறது அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம்.

  ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்ட அந்த படத்தை முடித்துக் கொடுங்கள் என மறுப்பு சொல்ல முடியாத அளவுக்கு செக்மேட் வைத்து கேட்டுக் கொண்டதால் என்ன செய்வது என்றே புரியாமல் தவித்து வருகிறாராம் அந்த பிரபல நடிகர்.

  சில பல கமிட்மென்ட்டுகளை கொடுத்துள்ள நிலையில், மீண்டும் அங்கே போய் சிக்கிக் கொள்வதா? என்கிற சிந்தனை தான் அவரை மனக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்கின்றனர் உடனிருப்பவர்கள்.

  சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன்..ஆதாரத்துடனே கிசுகிசு பேசுகிறேன்.. பயில்வான் ரங்கநாதன்!சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன்..ஆதாரத்துடனே கிசுகிசு பேசுகிறேன்.. பயில்வான் ரங்கநாதன்!

  பிரம்மாண்ட படம்

  பிரம்மாண்ட படம்

  ஆரம்பத்தில் இருந்தே பிரம்மாண்ட படங்களின் மீதும் புதுமையான படங்கள் மீதும் அதிகம் நாட்டம் கொண்ட அந்த பாஸ் நடிகர் தான் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த அந்த தேசப்பற்று படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு முன் வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக நடந்த சில பிரச்சனைகள் காரணமாக அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. இதற்கு மேல் இந்த படம் எந்திரிக்கவே எந்திர்க்காது என்கிற நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகர்கள் எல்லாம் வேறு வேலையை பார்க்க போய் விட்டனர்.

  காற்றுள்ள போதே

  காற்றுள்ள போதே

  நடிகர் சினிமாவில் பல காலங்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும், அந்த படங்கள் எல்லாம் செய்யாத வசூல் சாதனையை அவரது சமீபத்திய படம் செய்த நிலையில், மீண்டும் கிடப்பில் கிடக்கும் அந்த படத்தை தூசி தட்டிப் இப்போ வெளியிட்டால், வசூல் பிச்சிக்கிட்டு போகும் என்பது தெரிந்த உடனே தயாரிப்பு நிறுவனம் எப்படியாவது இதனை முதலில் முடித்து விட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டது.

  இயக்குநருக்கு அழுத்தம்

  இயக்குநருக்கு அழுத்தம்

  போங்கடா உங்க சங்காத்தமே வேண்டாம் என கோவிச்சிக்கிட்டு கோலிவுட்டை விட்டே கிளம்பிய அந்த இயக்குநரையும் விடாமல் துரத்திப் பிடித்து, இதை முடித்துக் கொடுத்து விடுங்கள் என காலில் விழாத குறையாக கேட்டதும், அவருக்கும் தான் உழைத்த உழைப்பு வீணாகி விடக் கூடாதே என்கிற எண்ணத்தால் ஓகே சொல்லி விட்டாராம். இந்நிலையில், அடுத்ததாக நடிகருக்கும் அழுத்தம் கொடுத்து இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது தயாரிப்பு தரப்பு. பணம் போட்ட கஷ்டம் அவங்களுக்குத்தானே தெரியும்.

  நடிகருக்கு தலைவலி

  நடிகருக்கு தலைவலி

  வெற்றி சந்தோஷத்தில் இருந்தாலும், இந்த வெற்றியை அடுத்த அடுத்த படங்களின் மூலம் எப்படி மேலும், லாபமாக அறுவடை செய்யலாம் என்கிற பல பலே திட்டங்களை போட்டிருக்கும் நடிகரை மீண்டும் இழுத்து அந்த படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வரும் நிலையில், அக்செப்ட் பண்ணவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் குழம்பிப் போய் கிடக்கிறாராம்.

  சம்பளத்தை உயர்த்தி

  சம்பளத்தை உயர்த்தி

  நடிகரை தங்கள் வலைக்குள் கொண்டு வர அவருக்கு ஏற்கனவே பேசப்பட்ட சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திக் கூட தருகிறோம் என ஆசை வலை வீசி தயாரிப்பு தரப்பு இழுத்திருப்பது கிட்டத்தட்ட வெற்றியில் முடிந்துள்ளதாகவும், விரைவில் படத்தை மீண்டும் துவங்கும் வேலை நடைபெறும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தால் சரி!

  English summary
  Producer side gives heavy pressure to Popular actor to complete the almost dropped project turns the hot topic in Kollywood Industry. Soon a super happy news expected from the producer.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X