Don't Miss!
- Finance
ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- News
ரெட் அலர்ட்.. வெள்ள நீரில் மிதக்கும் மும்பை... கொட்டி தீர்த்த கனமழை.. கோவாவிலும் மழையால் மக்கள் அவதி
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
திமிர்பிடித்த நடிகையை காப்பாற்றும் 3 நடிகர்கள்… திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர் !
சென்னை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் அந்த 3 எழுத்து நடிகை.
கோலிவுட், டோலிவுட் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ளார்.
சூரியை ஓவர்டேக் செய்த விஜய்சேதுபதி.. கேஜிஎஃப் 3 எப்படி இருக்கும்.. பிகேவின் டாப் 5 பீட்ஸ் இதோ!
தற்போது அந்த நடிகைக்கு படவாய்ப்பு பெரிதாக இல்லை. அந்த நடிகையை அந்த 3 நடிகர்கள் காப்பாற்றி வருவதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கோடியில் சம்பளம்
90ஸ் கிட்டுகளின் பேவரைட் நடிகையான இவர் , சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகே முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். ஆரம்பத்தில், சில லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த அந்த நடிகை, தற்போது 3 முதல் 5 கோடி ரூபாய் வரை தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார்.

திமிரால் அங்கிகாரம் கிடைக்கல
கோடி கணக்கில் சம்பளம் வாங்கினாலும், படத்தின் ப்ரோமோஷன், இசை வெளியீட்டு விழா என எதிலும் கலந்து கொள்ளமாட்டார். இதனால், பல தயாரிப்பாளர்கள் இவரை தவிர்க்கத் தொடங்கினார்கள். தனது அசாத்தியமான நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்த இந்த நடிகைக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய அங்கிகாரம், அவரின் திமிரால் கிடைக்காமல் போய்விட்டது.

3 நடிகர்களால்
சமீபத்தில் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடிய அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் அந்த நடிகையை தேடி ஒரு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு, அந்த மூன்று நடிகர்கள் தான் காரணம் என்று பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஒல்லி நடிகர், பயில்வான் நடிகர், மாஸ் நடிகர் என இவர்கள் தான், அந்த திமிர்பிடித்த நடிகையை காப்பாற்றி வருவதாக தயாரிப்பாளர் கோபத்துடன் கூறியுள்ளார். இப்படியே போனால் அந்த நடிகை சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார் என்று அந்த தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

பட வாய்ப்பு இல்லை
தற்போது அந்த மூன்று எழுத்து நடிகை வரலாற்று சிறப்புமிக்க ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பரில் திரைக்கு வருகிறது. மேலும், மலையாளத்தில் டாப் நடிகர் ஒருவரின் படத்திலும், வெப்சீரிஸிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதைத்தவிர இந்த மூன்று எழுத்து நடிகைக்கு கைவசம் படம் எதுவும் இல்லை.