இப்படியே பண்ணா அடுத்து அவருக்கு வந்த நிலைமை தான்.. காமெடி நடிகருக்கு வார்னிங் கொடுத்த தயாரிப்பாளர்!

By Staff

சென்னை: உச்சத்தில் இருந்த காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோக்களாக மாறிய நிலையில், கிடைத்த கேப்பில் காமெடி நடிகராக உச்சத்தை தொட்டார் அந்த அதிர்ஷ்டக்கார நடிகர்.

நீங்களும் ஹீரோவாக நடிக்கலாம் பாஸ் என சில இயக்குநர்கள் உசுப்பேற்ற, அவரும் அந்த ரூட்டிற்கு திரும்பி ஏகப்பட்ட படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு தலையில் எக்ஸ்ட்ராவாக ரெண்டு கொம்புகள் முளைத்து விட்டதாம். நடிக்கவே தடை விதித்து ஒதுக்கப்பட்ட அந்த காமெடி நடிகருக்கு ஆன நிலை தான் உனக்கும் ஆகப் போகுது என பிரபல தயாரிப்பாளர் ஒருவரே எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காமெடி நடிகர்களின் ஆசை

காமெடி நடிகர்களின் ஆசை

காமெடி நடிகராக அறிமுகமாகும் ஒவ்வொருத்தருக்கும் எப்படியாவது ஹீரோ ஆகி விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு விடும். அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் பலத்தை மனதில் கொண்டு ஒரு சில நடிகர்கள் அவர்களை ஹீரோவாக்கி அழகு பார்க்க தொடங்கி விடுவார்கள். காமெடி நடிகர்களும் தங்களுக்கு செட் ஆகும் கதைகளை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

எத்தனை படம் ஓடலைனாலும்

எத்தனை படம் ஓடலைனாலும்

அந்த வரிசையில் தற்போது பிரபலமாக உள்ள காமெடி நடிகர் தனது நடிப்பில் எத்தனை படங்கள் ஓடவில்லை என்றாலும் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறார். ஹீரோவாக நடித்தால் கூட பரவாயில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் அராஜகம் தான் தற்போது அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கும், பணத்தை போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தலைவலியாக மாறி உள்ளது.

ஓவர் அராஜகம்

ஓவர் அராஜகம்

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், நேரத்தை எப்படி வீணாக்கலாம் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறாராம் அந்த காமெடி நடிகர். ஒரு நாளைக்கு 8 மணி நேர கால்ஷீட் என்றால், இவர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடிக்காமல், தேவையில்லாத வேலைகளையும் இயக்கத்திலும் மூக்கை நுழைத்து வருவதால் படக்குழுவினர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

அந்த நடிகரை போல ஆகிடுவ

அந்த நடிகரை போல ஆகிடுவ

இவரது அலப்பறைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு தயாரிப்பாளர் தனியாக அவரை அழைத்து இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தனா அப்புறம் அந்த லெஜண்டரி காமெடி நடிகருக்கு நேர்ந்த கதை தான் உனக்கு ஆகும். சினிமாவில் அனுசரணை ரொம்பவே முக்கியம். ஒவ்வொரு நிமிடமும் பல லட்சங்கள் செலவழிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையில்லாமல் காசை கரியாக்காதே என கண்டிப்போடு சொல்லி விட்டார் என தகவல்கள் காத்துவாக்குல கசிந்து உள்ளது.

இஷ்டத்துக்கு சம்பளம்

இஷ்டத்துக்கு சம்பளம்

தயாரிப்பாளர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் தொடர்ந்து தனது சம்பளத்தை இஷ்டத்துக்கு ஏற்றி வருவதாகவும் அந்த நடிகர் மீது பரபரப்பு புகார்கள் கிளம்பி உள்ளன. மினிமம் கியாரண்டி கூட இல்லாத நிலையில், அதிக சம்பளம் ஏன் கேட்கிறீங்க என்றும் அந்த தயாரிப்பாளர் நடிகரை வெளுத்து வாங்கி உள்ளாராம். இதன் காரணமாக தொடர்ந்து அந்த படத்தில் நடிகர் நடிப்பாரா? இல்லை வேறு படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி விடுவாரா? என்கிற தலைவலியும் உருவாகி இருப்பதாக கூறுகின்ற்னர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X