தவளை தன் வாயால் கெடும்.. பாஸ் நடிகருக்கு வாஸ்து சரியில்லை போல.. டென்ஷனான தயாரிப்பு நிறுவனம்?
சென்னை: தன்னுடைய கம்பெனி பேனரில் இப்படி ஒரு படம் வந்தால் இந்தளவுக்கு ஓட்ட வாய் நாராயணனாக பாஸ் நடிகர் இருப்பாரா என்கிற கேள்வியை சோஷியல் மீடியாவில் பலர் எழுப்பிய நிலையில், தயாரிப்பாளரே போன் போட்டு நடிகரிடம் ரொம்பவே ஹார்ஷ்ஷாக பேசிவிட்டார் என திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
எப்படியாவது இந்த முறையாவது தனது பெயரை காப்பாற்றலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் அந்த இயக்குநருக்கு எல்லாமே ரிவர்ஸ் கியர் போட்டு போய்க் கொண்டிருக்கிறே என்கிற கோபம் அதிகமாகவே வந்து விட்டது.

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே படத்தில் நடித்த 2 ஹீரோக்களுக்கு நடுவே இருக்கும் ஈகோ கிளாஷ் தான் எனக் கூறுகின்றனர். அதற்காக இப்படியா வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைப்பாரு அந்த பாஸ் நடிகர் என படக்குழுவில் இருக்கும் பலரே விளாசி வருகின்றனர்.
தவளை தன் வாயால் கெடும்: மிகப்பெரிய மேதையான அந்த நடிகர் எங்கே எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் இருக்கிறாரே என தயாரிப்பாளர் இயக்குநரிடம் எகிறி விட்டாராம். தானே பயங்கர கடுப்பில் இருக்கிறேன் என இயக்குநர் தனது கோபத்தை கொட்ட, பணம் போட்டு படம் எடுத்தவர் பாஸ் நடிகரிடமே போன் போட்டு காட்டு கத்தல் கத்தியிருப்பதாக கூறுகின்றனர்.
இதிலும் கேமியோவா?: இளம் நடிகருக்குத்தான் இந்த படத்திலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அந்த கடுப்பு தான் பாஸ் நடிகருக்கும் அந்த நடிகருக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்பட இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்கின்றனர். முதல் பாதியின் இறுதியில் தான் பாஸ் நடிகர் என்ட்ரியே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
பெரிய சிக்கல்: ஒரு படத்துக்கு வெளியே இருந்து ஆயிரம் சிக்கல் வரலாம். ஆனால், படத்தில் நடித்த மெயின் ஹீரோ மூலமாகவே சிக்கல் வந்தால் அந்த படம் எப்படி தப்பிக்கும் என்கிற கேள்விகள் தான் தற்போது கோலிவுட்டில் சுழன்று வருகின்றன. ஆனாலும், இந்த எல்லா பிரச்சனையும் படம் வெளியாகும் வரைதான் இருக்கும் என்றும் படம் வெளியான பின்னர், நிச்சயம் இயக்குநர் விஷனை பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றே கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











