ஹீரோயின் சான்ஸுக்காக பிரைவேட் பார்ட்டி வச்சிட்டு.. இப்போ கண்ணகியா டிராமா ஆடுறியா.. பிரபலம் பகீர்!

By Staff

சென்னை: சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலையை பார்த்துவிட்டு டாப் ஹீரோயினாக மாறிய அந்த ஆட்டக்காரி நடிகை தற்போது சில தயாரிப்பாளர்கள் படங்களை புறக்கணித்து வருவதால் தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான அந்த நபர் கடுப்பாகி நடிகைக்கு போன் போட்டு கண்டபடி திட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆரம்பத்தில் எதுவும் தெரியாமல் அப்பாவி பெண்ணாக அந்த நடிகை சினிமாவுக்கு வரும்போது அவருக்கான டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து சரியான சம்பளத்தைக் கொடுத்து அந்த நடிகையை ஹீரோயினாக மாற்றியதே அந்த பிரபல தயாரிப்பாளர் தானாம்.

gossip kollywood actress gossip

ஆனால், தற்போது அவரது படத்தில் நடிக்க கூப்பிட்டால், நடிகை ரொம்ப நாளாகவே அவாய்டு பண்ணிட்டு வந்த நிலையில், மற்ற இடங்களில் தயாரிப்பாளர் குறித்து தப்புத் தப்பாக பேச ஆரம்பித்தது தான் அந்த பிரபலத்துக்கு நடிகை மீது இப்படியொரு கோபம் கொந்தளித்துக் கொண்டு வரக் காரணம் என்கின்றனர்.

ராங்கு காட்டும் நடிகை: சமீப காலமாக டாப் நடிகர்களுடன் கெட்ட ஆட்டம் போட்டுக் கொண்டு திரியும் அந்த இளம் நடிகை சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை எல்லாம் ஏளனமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்கின்றனர். மேலும், தான் பிறந்து வளர்ந்த இடத்திலேயே எந்தவொரு ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என நடிகை பலரை பகைத்துக் கொண்டது நடிகையின் வளர்ச்சிக்கு சரியல்ல எனக் கூறுகின்றனர். ஆனால், நடிகைக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நடிகை ராங்கு காட்டி வருவதாக கூறுகின்றனர்.

தயாரிப்பாளர் பற்றி தப்புத்தப்பாக: தன்னை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் குறித்து நடிகை தப்புத் தப்பாக சினிமா வட்டாரத்தில் பேசி அவரை அசிங்கப்படுத்தும் வேலைகளை பார்த்து வருவதால் தயாரிப்பாளர் நடிகை மீது ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். நடிகைகளை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைக்கிறார் என்றும் தன்னையும் ஒருமுறை தகாத முறையில் அழைத்தார் என்றும் தான் ஒத்துக் கொள்ளாமல் அதன் பின்னர் அவர் படங்களையே தவிர்த்து வருகிறேன் என நடிகை பேசியது தயாரிப்பாளர் காதுகளுக்கு சென்றது தான் தற்போது நடிகைக்கு கச்சேரி நடக்கவே காரணம் என்கின்றனர்.

கண்ணகி மாதிரி நடிக்கிறியா?: பட வாய்ப்புக்காக ஆரம்பத்தில் பிரைவேட் பார்ட்டி எல்லாம் நடத்திவிட்டு, தற்போது கண்ணகி மாதிரி டிராமா போடுறியா என நடிகைக்கு போன் போட்டே அந்த தயாரிப்பாளர் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் என்றும் சீக்கிரமே உன் சினிமா வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போடுறேன்னும் சவால் விட்டு நடிகையை கலங்கடித்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X