மாமனாரை மீண்டும் நஷ்டத்துக்கு தள்ளிய நடிகரின் தம்பி.. இனிமேல் நடிக்கவே வேண்டாம்னு ஒரே சண்டையாம்?
சென்னை: அந்த பிரபல தொழிலதிபர் ஏற்கனவே பொண்டாட்டி பேச்சைக் கேட்டு பல கோடி ரூபாய் இழந்த நிலையில், அவரை வைத்து மாஸ் நடிகர் தனக்கு வேண்டிய விஷயத்தை செய்துக் கொண்டதாக கடுமையான பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால், அதை வெளிப்படையாக பேச முடியாமல் அந்த தயாரிப்பாளர் முடிந்தவரை மூடி மறைத்து பேசியுள்ளார் என்கின்றனர்.
இந்நிலையில், தனது மகளை கட்டிக் கொடுத்த பாவத்திற்காக மாப்பிள்ளை பண்ண டார்ச்சர் தாங்க முடியாமல் பல கோடி ரூபாய் போட்டு அவரை வைத்து படம் பண்ண மாமனாருக்கு மீண்டும் கோடிகளில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக மாறிவிட்டார் என்கின்றனர்.

மேலும், இதெல்லாம் செட்டாகாதுன்னு ஏற்கனவே சொன்னேன். நீ சிபாரிசு பண்ணதால தான் பணம் போட்டேன். ஆனால், இனிமேல் பணம் கேட்டு வீட்டுப் பக்கம் வர வேண்டாம் என சொல்லிவிடு என்றும் முடிந்தால் நடிக்கவே வேண்டாம் என்றே சொல்லிவிடு என மகளிடம் கறாராக சொல்லிவிட்டாராம் அந்த நஷ்டமடைந்த தொழிலதிபர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பினாமி: பல கோடி நஷ்டமடைந்த நிலையில், மாஸ் நடிகரை வைத்து பல கோடி ரூபாய் முதலீடு செய்து எப்படி அந்த தொழிலதிபரால் படம் எடுக்க முடியும். கேட்பவன் கேனையாக இருந்தால் கேபி சுந்தராம்மாள் கே.எஸ். ரவிக்குமார் படத்தில் நடிக்கிறார் என்று சொல்வது போல கதையளந்து விடுகிறார் என்றும் பினாமி என்கிற வார்த்தை அவரை பலமாக தாக்கியதால் தான் அதற்கு முட்டுக் கொடுத்துள்ளார் என்றும் அந்த நடிகருக்கு இவர் மட்டுமின்றி ஏகப்பட்ட பேர் பினாமிகளாக உள்ளார்கள் என்றும் அந்த பிரபல நடிகையே பினாமி தான் என்றும் ஷாக்கிங் தகவல்கள் எல்லாம் புகைந்து வருகின்றன.
நடிக்கவே வேண்டாம்: ஏற்கனவே அண்ணன் நடிக்கிறேன் என்கிற பெயரில் பல வருடமாக பல தயாரிப்பாளர்களை காலி செய்தது போதாது என தற்போது உன் புருஷனும் நடிக்கப் போறேன்னு டார்ச்சர் பண்றான். ரொம்ப நாளா நீ கேட்டுக் கொண்டதால் தான் வெளிநாடுகளில் எல்லாம் பல கோடி செலவு செய்து படப்பிடிப்பு நடத்த என் சொத்தையெல்லாம் அழிச்சேன். ஆனால், நினைச்சபடியே படம் புட்டுக் கொண்டது. நான் இப்போ லாஸ் ஆனது தான் மிச்சம். இதுக்கும் மேல, என்னை எந்தவொரு வம்புலையும் இழுத்து விட வேண்டாம். தயவு செய்து உன் புருஷனை நடிக்கவே வேண்டாம்னு சொல்லிடு என தனது மகளிடம் சொல்ல அப்பாவிடமே சண்டைப் போட்டுக் கொண்டு புருஷனுடன் கிளம்பி விட்டார் அந்த பிரபலத்தின் மகள் என்கின்றனர்.
அடுத்த படம் வருமா?: முதல் படமே சொதப்பிய நிலையில், நடிகரை நம்பி மற்ற தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் எடுப்பார்களா? இந்த படமே மாமாவின் காசு என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து உருவாகவே சில ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என்றும் இதற்குமேல் அந்த நடிகர் மீண்டும் புதிய படத்தில் கமிட் ஆவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், நடிகரின் மனைவிக்கு தனது கணவர் முன்னணி ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே உள்ளது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











