மாஸ் நடிகரின் பேட்டியால் அப்செட் ஆன தயாரிப்பாளர்.. பண்ண பில்டப் எல்லாம் பாழாகிடுச்சேன்னு ஃபீலிங்!

By Staff

சென்னை: மாஸ் நடிகரின் சமீபத்திய பேட்டி ஏகப்பட்ட பிரச்சனைகளையும் விவாதங்களையும் கிளப்பி உள்ளது.

அந்த விழாவை ரத்து செய்தும் மனுஷன் அசால்ட்டா பேசி அதற்கு தடையாக இருந்த அத்தனை பேருக்கும் பதிலடி கொடுத்து விட்டார்.

ஆனால், அவர் பேசியதில் தயாரிப்பாளர் ஒருவர் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ் நடிகர் பேட்டி

மாஸ் நடிகர் பேட்டி

அந்த பிரம்மாண்ட விழாவுக்கு பதிலாக நடிகரின் மாஸை குறைக்க ஒரு சின்ன பேட்டியை மட்டுமே தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்திருந்தது. சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் அந்த பேட்டியையே பெரிய விழாவாக மாஸ் நடிகர் தனது ஸ்மார்ட்டான பதில்கள் மூலம் மாற்றியது பலருக்கு பல சிக்கல்களை உருவாக்கி உள்ளது.

அரசியல் நிலைப்பாடு

அரசியல் நிலைப்பாடு

அரசியல் மாநாடாக மாறி விடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த விழாவையே ரத்து செய்ய முடிவு செய்த நிலையில், அவர்கள் இடத்தில் அமர்ந்து கொண்டே ரசிகர்கள் கைகளிலேயே பந்தை தூக்கிப் போட்டு கோல் அடித்து இருந்தது மிகப்பெரிய அதிர்வலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி உள்ளது.

அப்செட்டான தயாரிப்பாளர்

அப்செட்டான தயாரிப்பாளர்

இந்த படத்தின் தயாரிப்பாளர் அப்செட் ஆனதை விட இதில், செம ட்விஸ்ட்டாக அடுத்த படத்தின் தயாரிப்பாளர் அப்செட் ஆகி உள்ளது தான் கோடம்பாக்கம் முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி வரை எதிரொலித்து வருகிறது. நடிகர் வெளிப்படையாக சொன்ன அந்த விஷயம் தான் அவர்களையும் சேர்த்து பாதித்துள்ளதாம்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

நடிகர் பக்கத்து ஸ்டேட் மொழியில் முழுக்க முழுக்க படம் பண்ணப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அதெல்லாம் இல்லைப்பா, வழக்கம் போல அதுவும் ஒரு டப்பிங் படமாகத்தான் அங்கே வெளியாகும். நம்மளோட ஏரியாவை விட்டு வெளியே போகிற ஐடியா இல்லை என மாஸ் நடிகர் மனசை திறந்து பேசியது தான் பிரச்சனையை கிளப்பி உள்ளதாம்.

பில்டப் போச்சே

பில்டப் போச்சே

பக்கத்து ஸ்டேட் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர் பண்ணத்தான் தயாரிப்பு நிறுவனம் முழுக்க முழுக்க இந்த படத்தை பக்கத்து ஸ்டேட் படமாகவே எடுக்கப்ப் போவதாக ஹீரோயின் முதல் டெக்னீஷியன் வரை அத்தனை பேரையும் அந்த ரசிகர்களுக்கு பிடித்த ஆட்களாவே அள்ளிப் போட்டு வெண்ணையை உருட்டி வரும் நிலையில், தாழியை நடிகரின் வெளிப்படையான பேச்சு அந்த தாழியை தூக்கிப் போட்டு உடைத்துள்ளதாம்.

பிசினஸ் பாதிக்கும்

பிசினஸ் பாதிக்கும்

தயாரிப்பாளரின் கவலை எல்லாம் தற்போது இரு மொழி படம் என விளம்பரம் செய்து பெரிய அளவில் பிசினஸ் செய்ய நினைத்தது எல்லாம் வீணாப்போச்சே என்கிற ரீதியில் தான் உள்ளதாம். ஆனால், எப்படியாவது இந்த படத்தை இரு மொழி படமாகவே மாற்றி விட வேண்டும் என்கிற முனைப்பில் உறுதியாக உள்ளார்களாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X