பிடி கொடுக்காத பிரைட் நடிகர்.. கடும் விரக்தியில் தயாரிப்பாளர்.. அடுத்து என்ன செய்யப்போறாரு தெரியுமா?

By Staff

சென்னை: அதிரடியாக பல பெரிய பட அறிவிப்புகளை அறிவித்து மாஸ் காட்டி வந்த அந்த பிரபல தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து அடி மேல அடி விழுந்து வரும் நிலையில், கடும் அப்செட்டில் உள்ளதாக கூறுகின்றனர்.

மாமனாரை வைத்து பண்ண படம் மாஸ் ஹிட்டாக போன நிலையில், மருமகனை வைத்து படம் பண்ண அந்த தயாரிப்பாளருக்கு தலையில் பெரிய அடி விழுந்தது தான் மிச்சம் என பலரும் கிண்டல் செய்ததிலேயே தயாரிப்பாளர் கடுப்பாகி விட்டாராம்.

மேலும், பிரைட் நடிகரை வைத்து பெரிய படத்தை பண்ணலாம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்த படம் இன்னமும் ஆரம்பிக்கவே இல்லையே என்கிற விரக்தியில் தயாரிப்பாளர் புதிய முடிவை எடுத்து விட்டதாக கூறுகின்றனர்.

தடாலடி அறிவிப்புகள்

தடாலடி அறிவிப்புகள்

அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்கள் தனது பேனரில் வெளியாகப் போவதாக அந்த பிரபல தயாரிப்பாளர் தடாலடி அறிவிப்புகளை வெளியிட்டு மாஸ் காட்டி வந்தார். ஆனால், வெளியான ஒல்லி நடிகரின் படம் ஓடாமல் போன நிலையில், தயாரிப்பாளர் டல் அடித்து காணப்படுகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் பலமாக ஒலித்து வருகின்றன.

ஒல்லி நடிகர் படம் ஓடல

ஒல்லி நடிகர் படம் ஓடல


ஒல்லி நடிகரையும் அவரது அண்ணனையும் நம்பி ஏகப்பட்ட கோடிகளை அந்த தயாரிப்பாளர் கொட்டியும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை அந்த படம் வாரிக் குவிக்க தவறியதால் தயாரிப்பாளர் போட்ட பல திட்டங்கள் வீணாக போய் விட்டதாக கூறுகின்றனர்.

பிடி கொடுக்காத பிரைட் நடிகர்

பிடி கொடுக்காத பிரைட் நடிகர்

ஏற்கனவே தேசிய விருது இயக்குநர் ஒருவரின் படத்தில் இருந்து பாதியில் விலகிய அந்த பிரைட் நடிகர் இன்னொரு தேசிய விருது நடிகரின் படத்தில் நடிக்கவே பிடி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அந்த இயக்குநரின் படத்திற்கு சென்றால் பெண்டு நிமிர்ந்து விடும் என்பதாலே நடிகர் தொடர்ந்து பின் வாங்கி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தயாரிப்பாளருக்கு நஷ்டம்

தயாரிப்பாளருக்கு நஷ்டம்

படத்தை அறிவித்து விட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆரம்பிக்கவே இல்லை என்றால் அந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகளுக்காக இதுவரை தயாரிப்பாளர் செய்த செலவு எல்லாமே வீணாக போய் வருவதாகவும், ஏகப்பட்ட நஷ்டங்களை தயாரிப்பாளர் சந்தித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

அதிக சம்பளம் கேட்கிறாங்க

அதிக சம்பளம் கேட்கிறாங்க

புதிதாக வேறு ஏதாவது பெரிய நடிகரை வைத்து இங்கே படம் பண்ணலாம் என நினைத்தாலும், கூட இளம் நடிகர்கள் கூட அதிக சம்பளம் கேட்பதை பார்த்து அந்த தயாரிப்பாளர் ஆடிப் போயுள்ளாராம். பிரைட் நடிகர் எப்போ வந்து நம்ம படத்தை ஆரம்பிப்பார் என்றும் இயக்குநருக்கும் நடிகருக்கும் முட்டிக் கொள்ளாமல் இருக்கணும், படம் முழுசா முடிந்து வெளியே வருவதே சந்தேகம் என்கிற பல சிந்தனைகள் தோன்றிய நிலையில், திடீரென இன்னொரு படத்தை ஆரம்பிக்கும் முடிவில் தயாரிப்பாளர் இறங்கி உள்ளார் என்கின்றனர்.

கன்னட நடிகரை வைத்து

கன்னட நடிகரை வைத்து

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களே இஷ்டத்துக்கு சம்பளம் கேட்டு வரும் நிலையில், பிரைட் நடிகர் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக பிரபல கன்னட நடிகரை வைத்து ஒரு படத்தை முடித்து விடலாம் என்கிற முடிவுக்கு தயாரிப்பாளர் வந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், சமீப காலமாக அந்த நடிகர் நடிக்கும் படங்களே ஓடுவதில்லை. அவர் எதுக்கு கொஞ்சம் யோசியுங்க என்றும் தயாரிப்பாளருக்கு நெருங்கிய வட்டாரங்கள் அட்வைஸ் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X